கொப்பரை தேங்காயில் ரூ. 50 கோடி ஊழல்
ஈரோடு:
தமிழகத்தில் கொப்பரை தேங்காய் கொள்முதலில் பெரும் ஊழல் நடந்துள்ளது என திமுக அரசு மீது தமிழ் மாநிலகாங்கிரஸ் புகார் கூறியுள்ளது.
ஈரோட்டில் நடந்த மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த முன்னாள் மத்திய அமைச்சரும்,த.மா.கா தலைவர்களில் ஒருவருமான தனுஷ்கோடி ஆதித்தன் நிருபர்களுக்கு அளித்த ஆவேசப் பேட்டியில்கூறியதாவது:
தமிழ் மாநில காங்கிரஸ், கூட்டணியில் இடம் பெறும் கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் அளிக்கும். தனித்துநின்று போட்டியிட்டாலும், கூட்டணி ஆட்சி அமைந்தால் அந்தக் கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் உண்டு.
தமிழகத்தில் வரும் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட தயாராகி வருகிறோம். கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில்மூப்பனார் முடிவு செய்வார். அதற்கு முன் மதச்சார்பற்ற கட்சிகளுடன் மகா கூட்டணி அமைப்பது குறித்துஆலோசனை செய்து வருகிறோம். மதச்சார்பற்றவர்களின் ஓட்டுகள் சிதறிவிடக் கூடாது என்பதில் தெளிவாகஉள்ளோம்.
தமிழ் மாநில காங்கிரஸ் பிரியும் முன்பைவிட இப்போது வலிமையான கட்சியாக உள்ளது. கட்சி வளர்ச்சிபெற்றுள்ளது. எனவே, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை சாதரணக் கட்சியாக நினைக்க வேண்டாம். நாங்கள்யாரிடமும் கையேந்த வேண்டிய நிலையில் இல்லை.
கொள்கைகளை ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டோம். கடந்த தேர்தல்களில், அ.தி.மு.க, தி.மு.க, பா.ஜ.கஆகியவை தனித்து நின்று போட்டியிட்டிருந்தால் 15 சதவீத ஓட்டுகள் கூட பெற்றிருக்க டியாது. வாஜ்பாய்பிரதமராக வேண்டும் என்ற நோக்கத்தில் தான் மக்கள் ஓட்டுப் போட்டனர்.
ஊழல், ஊழல் என எம். ஜி.ஆர்., கருணாநிதியை விரட்டினார். ஜெயலலிதாவை ஊழல், ஊழல் என கருணாநிதியைவிரட்டினார். இப்போதும் கருணாநிதியின் ஆட்சியில் ஊழல் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.
கருணாநிதி அறிவியல்பூர்வமாக ஊழல் செய்து வருகிறார். கொப்பரைத் தேங்காய் கொள்முதலில் 50 கோடிரூபாய்க்கும் மேல் ஊழல் நடந்துள்ளது. இந்த ஊழல் குறித்து ஆய்வு நடத்தி மேலிடத்திற்கு அறிக்கை அனுப்பஉள்ளோம்.
உழவர் சந்தை வெறும் கண்துடைப்பாக இருந்து வருகிறது. இப்போது தக்காளி விலையில் கடும் உயர்வுஏற்பட்டுள்ளது. இந்த விலை உயர்வை உழவர் சந்தை மூலம் ஏன் குறைக்க முடியவில்லை?
தமிழகத்தில் விவசாயிகள் பிரச்னைகள் தீர்க்கப்படவில்லை. மூடிய மில்கள் திறக்கப்படவில்லை. நெசவாளர்கள்பாதிப்படைந்துள்ளனர். இதனை கண்டித்து தொடர்ந்து போராட்டம் நடத்துவோம்.
இவ்வாறு தனுஷ்கோடி ஆதித்தன் கூறினார்.












Click it and Unblock the Notifications