விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணி
கோவை:
பஸ்சின் முன் பக்கக் கண்ணாடியை உடைத்துக் கொண்டு வெளியே விழுந்த பெண், அதிசயமாக உயிர் தப்பினார்.
கோவையில் குண்டு வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்த பின்னர், பல இடங்களில் செக் போஸ்ட் அமைக்கப்பட்டது. இந்த செக் போஸ்ட்தற்போது அகற்றப்பட்டு விட்டது. இருந்தபோதிலும் அந்த இடங்களில் பல்வேறு சோதனைகளுக்காக டிவைடர்கள்உருவாக்கப்பட்டுள்ளன. இதே போன்று கரும்புக் கடை அருகே உக்கடம் குளத்தையொட்டி ஒரு செக் போஸ்ட் அமைக்கப்பட்டது.ஒரு வளைவில் அமைக்கப்பட்டுள்ள இந்த செக் போஸ்ட் தற்போது அகற்றப்பட்டு விட்டது.
ஆனால் ரோட்டில் போடப்பட்ட டிவைடர் எனப்படும் ஒரு அடிச் சுவர் மட்டும் அகற்றப்படாமல் இருந்து வருகிறது. இந்நிலையில்இந்த வழியாக ஒரு பஸ் வந்தது. பஸ்சிற்கு முன்பாக ஒரு ஸ்கூட்டர் இந்த டிவைடரில் மோதியது. இதனால் நிலை தடுமாறியஸ்கூட்டரில் மோதாமல் இருக்க டிரைவர் திடீர் பிரேக் அடித்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக பஸ்சின் முன்பகுதியில் கண்ணாடி அருகே பயணம் செய்த பெண் பயனி நிலைதடுமாறினார்.அவர் , முன் பகுதியில் இருந்த கண்ணாடியில் பலமாக மோதினார். இதனால் பஸ்சின் கண்ணாடி உடைந்து விழுந்தது. இதனால்,அந்தப் பெண் பயணி பஸ்சின் முன்பு போய் விழுந்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த டிரைவர் பஸ்சை எடுக்காமல் அப்படியே நிறுத்தி விட்டு பயணியை கிழே இறங்கி மீட்டார். அவருக்குபயணிகள் உதவினர். லேசாக காயம் அடைந்த அந்தப் பயணி கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகசேர்க்கப்பட்டுள்ளார்.
ஸ்கூட்டரில் சென்றவர், பஸ் மோதியதில் தூக்கி எறியப்பட்டார். இவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். ஆனால் ஸ்கூட்டர்மட்டும் பஸ் சக்கரத்தில் சிக்கி அப்பளம் போல் ஆனது.
இந்த ஆபத்தை சாதுர்யமாகத் தவிர்த்து உயிர் பலியாவதைத் தடுத்த டிரைவரைப் பொதுமக்கள் பாராட்டினர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications