இந்தியா பயமுறுத்திய வங்கப் புயல்
தாக்கா:
வங்கதேசத்துடனான டெஸ்ட் போட்டியில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 366 ரன்கள்எடுத்துள்ளது.
கிரிக்கெட் குழந்தையான வங்கதேசம், தனது முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவுடன் விளையாடிக் கொண்டுள்ளது. தாக்காவில்நடக்கும் இந்தப் போட்டியில், முதலில் பேட் செய்த வங்கதேசம் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 400 ரன்களைக்குவித்தது. அமினூல் இஸ்லாம் 145 ரன்களை எடுத்து சாதனைப் புத்தகத்தில் தனது பெயரையும் சேர்த்துக் கொண்டார். சுனில்ஜோஷி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
தற்போது இந்தியா தனது முதல் இன்னிங்ஸை ஆடிக் கொண்டுள்ளது. 81 ரன்களுக்கு 1 விக்கெட் என்ற நிலையில் சனிக்கிழமைஆட்டம் முடிந்தது. மூன்றாவது நாளான ஞாயிற்றுக்கிழமை தனது முதல் இன்னிங்ஸை மீண்டும் தொடர்ந்தது இந்தியா.
முரளி கார்த்திக் 43 ரன்களிலும், ரமேஷ் 58 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ராகுல் டிராவிட் 18 ரன்களில் கணக்கை முடித்துக்கொண்டார். கேப்டன் கங்குலி நின்று, நிதானமாக ஆடி 84 ரன்களைக் குவித்தார்.
இந்திய பேட்ஸ்மென்களுக்கு சிம்ம சொப்பனமாக பந்துவீச்சாளர் நைமூர் ரஹ்மான் இருந்தார். அவரது சுழற்பந்துவீச்சை சமாளிக்கமுடியாமல் இந்திய வீரர்கள் திணறினர். அவரை சமாளித்து கங்குலியும், சுனில் ஜோஷியும் ரன் குவிப்பில் ஈடுபட்டனர்.
சச்சின் டெண்டுல்கர், நைமூருக்கு மறக்க முடியாத நபராகினார். அவரது பந்தில் டெண்டுல்கர் ஆட்டமிழந்தார். டெண்டுல்கர்சேர்த்த ரன்கள் 18.
ஆட்ட நேர இறுதியில், ஜோஷி 71 ரன்களுடனும், அகர்கர் 15 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். நைமூர் ரஹ்மான்அபராமாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதற்காக அவர் விட்டுக் கொடுத்த ரன்கள் 110.
யு.என்.ஐ.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications