கருணாநிதியை ஆதரியுங்கள் ..கருப்பசாமி பாண்டியன்
தென்காசி:
தன்மானமுள்ள தமிழனாக வாழ வேண்டுமானால், கருணாநிதியை ஆதரிக்க வேண்டும் அதிமுகவிலிருந்து, விலகி திமுகவில் சேர்ந்துள்ள முன்னாள்எம்.எல்.ஏ. கருப்பசாமி பாண்டியன் தெரிவித்தார்.
தென்காசி நகர திமுக சார்பில் திமுக சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கலந்து கொண்டு கருப்பசாமி பாண்டியன் பேசியதாவது:
இது சாதனை விளக்கக் கூட்டம் என்றாலும் ஜெயலலிதாவைக் கண்டிக்கும் வகையில் அமைந்துள்ளது. ஊழல், அராஜகம் ஆகியவற்றுடன் 5 ஆண்டுகள்ஆட்சி புரிந்து வந்த ஜெயலலிதாவுக்கு மக்கள் 96 ல் மரணஅடி கொடுத்தனர்.
பர்கூர் தொகுதியில் தோற்றதும் அரசியலை விட்டு அவர் விலகியிருக்க வேண்டும். அவர் அரசியலுக்கு வந்ததே விபத்துதான். ராஜீவ்காந்தியின்மரணம்தான் அவரைக் கோட்டைக்கு அனுப்பியது.
அழுகிய கனி என்று என்னை ஜெயலலிதா தூக்கி வீசிய போது, நான் தேடிய கனி என்று கருணாநிதி என்னை அரவணைத்தார். அவரை மனசாட்சி உள்ளயாரும் வெறுக்க முடியாது.
ஸ்டாலினை முதல்வராக்க கருணாநிதி துடிக்கிறார் என்கிறார் ஜெயலலிதா. ஸ்டாலின் யார்? 25 வருட அரசியல்வாதி. மிசாவில் கஷ்டப்பட்டு, ஜெயிலுக்குப்போனவர்.
கடந்த 4 வருடங்களில் சென்னை நகரை மிகவும் தூய்மையாக்கியுள்ளார் ஸ்டாலின். இது அனைவருக்கும் தெரிந்த உண்மை. நேரு மகள் இந்திரா, இந்திராமகன் ராஜீவ், கேரளாவில் கருணாகரனின் மகன் முரளிதரன், ஏன் லல்லு மனைவி கூட பதவியில் இருக்கிறார். இது புதிய விஷயமல்ல.
சுதாகரன், தினகரன், பாஸ்கரன் இவர்களெல்லாம் யார்? தியாகிகளா? இவர்கள் ஜெயலலிதாவின் மகன்களா?. நம்மை காக்க, தன்மானமுள்ளதமிழனாக வாழ, கலைஞரின் ஆட்சி மீண்டும் மலர அனைவரையும் பாடுபட கேட்டுக் கொள்கிறேன் என்றார் கருப்பசாமி பாண்டியன்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications