நிலவு யாருக்கு சொந்தம்?
ரோம்:
அமெரிக்க அதிபர் யார் என்ற குழப்பம் ஒரு பக்கம் இருக்க, அதை விட முக்கியமான இன்னொரு குழப்பம் அமெரிக்காவை பரபரப்பாக்கியுள்ளது.
30 வருடங்களுக்கு முன்பு 1969 ம் ஆண்டு ஜூலை மாதம் நிலாவில் கால் பதித்தார் அமெரிக்காவின் நீல் ஆம்ஸ்ட்ராங். நிலாவில் மனிதன் காலடி வைத்ததைஉலகமே ஆச்சரியத்துடன் பார்த்தது. அப்படி ஆச்சரியப்பட்டவர்களில் இத்தாலியைச் சேர்ந்த பெர்னாண்டோ அலசான்டிரினியும் ஒருவர்.
ரோம் நகரைச் சேர்ந்த அலசான்டிரினிக்கு இப்போது 86 வயது. ஆம்ஸ்ட்ராங் நிலவுக்குச் சென்ற சம்பவத்தையடுத்து அமெரிக்கா முழுவதும்அதுதொடர்பான செய்திகள் வந்தன. புளோரிடாவைச் சேர்ந்த "செலஸ்டியன் கார்டன் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம் நிலவில் வீடு வேண்டுமா என்றுகேட்டு விளம்பரம் செய்தது.
செய்தியைப் படித்த அலஸாந்திரினிக்கு உடனடியாக தனக்கும், தனது இரு மகன்களுக்கும் சேர்த்து 2 பிளாட்டுக்கள் வாங்கினார். இது நடந்தது 1969-ல்.
1997 ம் ஆண்டு அமெரிக்கப் பத்திரிக்கை ஒன்றை அவர் பார்வையிட நேர்ந்தது. ரியல் எஸ்டேட் பிசினஸில் ஈடுபட்டிருக்கும் டெனிஸ் ஹோப் என்பவர், நிலவில்பிளாட் வாங்க விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என்றும், ஏற்கனவே 2 பிளாட்டுக்களை அமெரிக்க முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டர் மற்றும் நடிகர்டாம் க்ரூஸ் ஆகியோருக்கு விற்று விட்டதாகவும் அதில் செய்தி வந்திருந்தது.
அதை விட, ஹோப், நிலாவில் "தூதரகம் திறக்கப் போவதாகவும் செய்தியில் இருந்தது. இதைப் பார்த்த அலசான்டிரினி குழம்பினார். ஹோப் கொடுத்திருந்தவிளம்பரத்தில், குறிப்பிடப்பட்டிருந்த இடம், தான் வாங்கிய அதே பிளாட்தான் என்று அலசான்டிரினி நினைத்தார். நாம் வாங்கிய பிளாட்டை இன்னொருவருக்குவிற்பதா என கொதித்தெழுந்தார்.
வக்கீலை நியமித்தார். நிலாவில் வாங்கிய 2 பிளாட்டுக்களும் தனக்குத்தான் சொந்தம் என்று கூறி அமெரிக்க அதிபர் பில் கிளின்டனுக்கும்,ஐ.நா.பொதுச்செயலாளர் கோபி அன்னனுக்கும் மனு அனுப்பினார்.
ஆனால், டெனிஸ் ஹோப்போ, நிலவில் "பிளாட் விற்கும் முழு உரிமையும் தனக்கே இருப்பதாக கூறினார். 1862-ம் ஆண்டு அமெரிக்க வீட்டுப் பதிவுசட்டப்படிதான் பிளாட்டுகள் விற்கப்பட்டதாக கூறினார் ஹோப். 2 பிளாட்டுக்களும் ஏற்கனவே விற்கப்பட்டு விட்டது. அதுகுறித்த பத்திரங்கள் பதிவுசெய்தாயிற்று என்றும் அவர் தெரிவித்தார்.
ஹோப்பை விடுவதாக இல்லை அலசான்டிரினி. அடுத்த அமெரிக்க அதிபர் பதவியேற்றவுடன் அவரிடம் முறையிட காத்துள்ளார் அவர்.
யு.என்.ஐ.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications