இந்திய அணியில் சரந்தீப் சிங்
பரீதாபாத் (உ.பி.):
ஜிம்பாப்வே அணியுடனான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் கலந்துகொள்ளவுள்ள இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் ஆப்-ஸ்பின்னர் சரந்தீப் சிங் புதுமுகமாக அறிமுகமாகிறார். விக்கெட் கீப்பரும்மாற்றப்பட்டுள்ளார். வங்கதேசப் போட்டியில் விளையாடிய சபா கரீமுக்குப் பதில்விஜய் தாஹியா சேர்க்கப்பட்டுள்ளார்.
அணியிலிருந்து வெங்கடேஷ் பிரசாத் நீக்கப்பட்டுள்ளார். மொத்தம் 14 பேர் கொண்டஅணி தேர்வு செய்யப்பட்டுள்ளது.
மொத்தம் 2 டெஸ்ட் போட்டிகளில் இரு அணிகளும் மோதுகின்றன. முதல் போட்டிநவம்பர் 18-ம் தேதி டெல்லியில் நடக்கிறது. இந்தப் போட்டியில் கலந்துகொள்ளும்இந்திய அணியைத் தேர்வு செய்வத்கான கூட்டம் தேர்வாளர் குழுத் தலைவர் சந்துபோர்டே தலைமையில் பரீதாபாத்தில் நடந்தது.
சரந்தீப் சிங் தேர்வு அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. அனைவரும் ஆஷிஷ்கபூர் சேர்க்கப்படுவார் என்று நினைத்துக் கொண்டிருந்தனர். தற்போது ஜிம்பாப்வேஅணிக்கு எதிரான 3 நாள் போட்டியில், போர்டு லெவன் அணியில் கபூர் விளையாடிவருகிறார்.
அணி தேர்வு குறித்து கிரிக்கெட் வாரிய செயலாளர் லெலே கூறுகையில், ஆஷிஷ் கபூர்மற்றும் ஹர்பஜன் சிங் குறித்து விவாதிக்கப்பட்டது. இருப்பினும் சரந்தீப் சிங்கைத்தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டது.
அணியில் ஆப்-ஸ்பின்னர் இருந்தால் நல்லது என்று கேப்டன் கங்குலி விரும்பினார்.இதன் காரணமாகவே சிங் தேர்வு செய்யப்பட்டார்.
இந்திய அணியின் புதிய பயிற்சியாளரான ஜான் ரைட் இந்தியா வந்து விட்டார்.நவம்பர் 16- ம் தேதி அணி வீரர்களுடன் அவர் சேர்ந்து கொள்வார். டெல்லியில்வீரர்கள் அனைவரும் அன்று ஆஜராகின்றனர் என்றார் லெலே.
அணி விவரம்:
கங்குலி (கேப்டன்), ரமேஷ், எஸ்.எஸ்.தாஸ், சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட்,வி.வி.எஸ்.லட்சுமண், யுவராஜ் சிங், விஜய் தாஹியா (விக்கெட்கீப்பர்), அஜீத் அகர்கர்,ஸ்ரீநாத், ஜாகீர் கான், சரந்தீப் சிங், சுனில் ஜோஷி, முரளி கார்த்திக்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications