அமெரிக்கர்களைப் பாதிக்காத அதிபர் தேர்தல் குழப்பம்
வாஷிங்டன்:
அடுத்த அதிபர் யார் என்றே தெரியவில்லை. ஓட்டு எண்ணிக்கையில் நாளுக்கு நாள்குழப்பம். அமெரிக்க தேர்தல் முறை குறித்து உலகம் முழுவதும் அதிகரிக்கும்கிண்டல்கள். இத்தனை இருந்தும் அதுகுறித்துக் கவலையே இல்லாமல் உள்ளார்கள்அமெரிக்கர்கள்.
அமெரிக்கர்களிடையே எடுக்கப்பட்ட 2 கருத்துக் கணிப்புகளில் இது தெரியவந்துள்ளது. சி.பி.எஸ். நியூஸ் மற்றும் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை இணைந்துநடத்திய கருத்துக் கணிப்பில் 1720 பேர் வாக்களித்தனர். நவம்பர் 10 முதல் 12-ம் தேதிவரை இந்தக் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.
வாக்களித்தவர்களில் 72 சதவீதம் பேர், பிரச்சினை இந்த வாரம் அல்லது இந்தமாதத்திற்குள் முடிந்து விடலாம் என்று தெரிவித்தனர். 62 சதவீதம் பேர் இது ஒருபெரிய பிரச்சினையே இல்லை என்றனர். 35 சதவீதம் பேர் மட்டுமே கவலைதெரிவித்தனர்.
இதேபோன்ற ஒரு கருத்துக் கணிப்பை ஏ.பி.சி.நியூஸ் மற்றும் வாஷிங்டன் போஸ்ட்பத்திரிகை இணைந்து நடத்தின. இதில் 85 சதவீதம் பேர் இந்த பிரச்சினை குறித்துஉன்னிப்பாக கவனித்து வருவது தெரிந்தது. ஆனால் வெகு சிலரே பிரச்சினை குறித்துகவலை தெரிவித்துள்ளனர்.
சிலர், வாக்கு எண்ணிக்கைக் குழப்பம் புளோரிடா மாநிலம் சம்பந்தப்பட்டது. எனவேஇதை நீதிமன்றத்திற்கு இழுக்காமல், புளோரிடா அளவிலேயே முடித்துக் கொள்ளவேண்டும் என்றனர்.
புளோரிடா மாநிலத்தில் மொத்தம் 25 பிரதிநிதி ஓட்டுக்கள் உள்ளன. இவை யாருக்குக்கிடைக்கிறதோ அவரே அடுத்த அதிபர் என்ற நிலை நிலவுகிறது. இந்த வாக்குகளைஎண்ணுவதில்தான் இப்போது குழப்பமே.
"லேட் ஆனாலும் பரவாயில்லை - கோர்
இதற்கிடையே புளோரிடாவில் பதிவான ஒவ்வொரு ஓட்டையும் மிகக் கவனமாகஎண்ண வேண்டும் என்று ஜனநாயகக் கட்சி வேட்பாளரும், துணை அதிபருமான அல்கோர் கூறியுள்ளார்.
தனது அலுவலக வளாகத்தில், செய்தியாளர்களிடம் அல் கோர் பேசுகையில்,ஒவ்வொரு ஓட்டும் முக்கியமானது. இவை அனைத்தும் எண்ணி முடிக்கும் வரைஅமெரிக்கர்கள் பொறுமை காக்க வேண்டும்.
அவசரப்பட்டு ஓட்டுக்களை எண்ணி அதன் மூலம் வெற்றியைப் பறிக்க நான்விரும்பவில்லை. தவறாக போடப்பட்ட ஓட்டுக்களை எனக்குச் சாதகமாகபயன்படுத்திக் கொள்ள நான் விரும்பவில்லை. இதே போலத்தான் ஜார்ஜ் புஷ்ஷும்நினைப்பார் எனக் கருதுகிறேன்.
காலதாமதம் ஆனாலும் பரவாயில்லை. ஒவ்வொரு ஓட்டும் சரியாக எண்ணப்படவேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன் என்றார் கோர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications