ராஜ்குமார்: கடத்தல் முதல் விடுதலை வரை...
ஜூலை 30:
ஈரோடு மாவட்டம் காஜனூரில் உள்ள தனது பண்ணை வீட்டிலிருந்து ராஜ்குமாரும் 3 பேரும் வீரப்பனால்கடத்தப்பட்டனர்.
ஜூலை 31:
ராஜ்குமார் ரசிகர்கள் பெங்களூரில் தினத்தந்தி, காலைக் கதிர், தினச் சுடர், தினமணி ஆகிய தமிழ் பத்திரிக்கைஅலுவலகங்களைத் தாக்கினர். தமிழர்கள் மீதும் தாக்குதல் நடந்தது. ஒருவர் கொல்லப்பட்டார்.
தியேட்டர்கள் மூடல். படப்பிடிப்புகள் ரத்து.
பெங்களூரில் பெரும் பதற்றம் நிலவியது. பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன.
கர்நாடக அமைச்சரவை அவசரக் கூட்டம் கூடியது. நக்கீரன் ஆசிரியர் கோபாலை தூதுவராக அனுப்ப தமிழகத்தைக்கோருவது என முடிவு எடுக்கப்பட்டது.
ஆகஸ்ட் 1:
கோபால் காட்டுக்குப் புறப்பட்டார்.
வீரப்பனைப் பிடிக்க அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அதிரடிப் படையின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டன.
ஆகஸ்ட் 2:
சத்தியமங்கலம் காட்டுப் பகுதியை அடைந்தார் கோபால். பெங்களூர், மைசூரில் தமிழ் டிவி சானல்கள் ஒளிபரப்புநிறுத்தம்.
ஆகஸ்ட் 3:
வீரப்பன், ராஜ்குமாரை சந்தித்தார் கோபால்
ஆகஸ்ட் 5:
வீரப்பனிடமிருந்து தமிழக, கர்நாடக அரசுகளுக்கு 2 கேஸட்டுகளுடன் சென்னை திரும்பினார் கோபால்.
10 கோரிக்கைகளை முன் வைத்தார் வீரப்பன். வீரப்பன்-தமிழ் தேசியப் படை தீவிரவாதிகள் உறவு குறித்து அதிர்ச்சித் தகவலை வெளியிட்டார் கோபால்.
ஆகஸ்ட் 6:
கோரிக்கைகளை நிறைவேற்றத் தயார் என்று கர்நாடக முதல்வர் கிருஷ்ணா அறிவிப்பு.
ஆகஸ்ட் 10:
வீரப்பனிடமிருந்து மற்றொரு கேசட் கருணாநிதி, கிருஷ்ணாவுக்கு வந்து சேர்ந்தன. காட்டுக்குள் ராஜ்குமார்இருப்பதைப் போன்ற படங்களும் வந்து சேர்ந்தன.
ஆகஸ்ட் 11:
சென்னை சென்றார் கிருஷ்ணா.
ஆகஸ்ட் 13:
கருணாநிதியுடன் கோபால் சந்திப்பு
ஆகஸ்ட் 14:
வீரப்பனின் கோரிக்கையான தடா கைதிகளை விடுவிக்க கர்நாடக அரசு எடுத்த முடிவை எதிர்த்து மைசூர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல். வீரப்பனால் கொல்லப்பட்ட இன்ஸ்பெக்டர் ஷகீல் அகமதுவின் தந்தை அப்துல்கரீம் இந்த மனுவை தாக்கல் செய்தார்.
தடா கைதிகளை விடுவிக்கக் கோரி நீதிமன்றத்தில் கர்நாடக அரசு மனு
ஆகஸ்ட் 16:
தமிழ் தீவிரவாதியான ரேடியோ வெங்டசேனை ஜாமீனில் விடுவித்தது சென்னை சிறப்பு நீதிமன்றம். கோபால்இரண்டாவது முறையாக காட்டுக்குப் புறப்பட்டார்.
ஆகஸ்ட் 17:
ஜாமீனில் செல்ல வெங்டசேன் மறுப்பு. வழக்குகளை கைவிட நிபந்தனை விதித்தார்.
சத்தியமங்கலம் காட்டுப் பகுதியை அடைந்தார் கோபால்.
ஆகஸ்ட் 19:
தடா கைதிகள் மீதான வழக்குகளை கைவிட நீதிமன்றம் ஒப்புதல்.
ஆகஸ்ட் 23:
கோபால் குறித்து அவதூறகப் பேச வேண்டாம் என ஜெயலலிதாவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
ஆகஸ்ட் 24:
வீரப்பனிடமிருந்து மேலும் ஆடியோ, வீடியோ கேசட்டுகளுடன் திரும்பி வந்தார் கோபால்.
ஆகஸ்ட் 25:
மீண்டும் கருணாநிதியை சந்தித்தார் கிருஷ்ணா.
ஆகஸ்ட் 28:
மைசூர் தடா கைதிகளுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது.
ஆகஸ்ட் 29:
இந்த ஜாமீனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சிறப்பு மனு தாக்கல் செய்தார் அப்துல் கரீம்.
கோபால் மூன்றாவது முறையாக காட்டுக்குள் பயணம்.
செப்டம்பர் 1:
தடா கைதிகளை விடுவிக்க உச்ச நீதிமனறம் இடைக்காலத் தடை.
செப்டம்பர் 3:
அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தியது கர்நாடக அரசு.
செப்டம்பர் 6:
மீண்டும் தோல்வியுடன் கோபால் சென்னை திரும்பினார்,
செப்டம்பர் 8:
பெங்களூர் வந்தார் தமிழக முதல்வர். கிருஷ்ணா, ராஜ்குமார் குடும்பத்தினருடன் சந்திப்பு.
செப்டம்பர் 16:
மீண்டும் தியேட்டர்கள் திறப்பு.
செப்டம்பர் 20:
மீண்டும் கோபால் காட்டுக்குப் புறப்பட்டார்.
பர்வதம்மா ராஜ்குமார் உடல் நிலை பாதிப்பு. மருத்துவனையில் அனுமதி.
செப்டம்பர் 28:
கர்நாடக பந்த். மைசூர், பெங்களூரில் மட்டும் ஆதரவு. ராஜ்குமாகுடன் கடத்தரப்பட்ட நாகப்பா தப்பி வந்தார்.
செப்டம்பர் 29:
பழ. நெடுமாறனுக்கு வீரப்பனிடமிருந்து கேஸட் வந்தது.
செப்டம்பர் 30:
வழக்கம் போல் வெறும் கையுடன் திரும்பி வந்தார் கோபால்.
அக்டோபர் 9:
கோபால் 5வது முறையாக மீண்டும் காட்டுக்குள் சென்றார்.
அக்டோபர் 11:
தடா கைதிகள் விடுதலை வழக்கை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்.
அக்டோபர் 13:
நெடுமாறன்-கோபால் கூட்டு தூதுக்குழு காட்டுக்குள் சென்றது.
அக்டோபர் 16:
ராஜ்குமாருடன் கடத்தப்பட்ட கோவிந்தராஜூவை விடுவித்தான் வீரப்பன்.
அக்டோபர் 17, 18, 19:
உச்ச நீதிமன்றத்தில் தடா கைதிகள் விசாரணை. வீரப்பனை பிடிக்க இயலாத தமிழக, கர்நாடக அரசுகளுக்கு கடும்கண்டன் தெரிவித்தது நீதிமன்றம்.
அக்டோபர் 31:
தடா கைதிகள் வழக்கு மீதான தீர்ப்பை ஒத்தி வைத்தது நீதிமன்றம்.
நவம்பர் 6:
காட்டுக்குள் 100 நாட்களை முடித்தார் ராஜ்குமார்.
நவம்பர் 7:
தன்னை தேச விரோதி என எதிர்க் கட்சிகள் விமர்சித்ததால் காட்டுக்குள் செல்ல மாட்டேன் என நெடுமாறன்அறிவித்தார்.
தடா கைதிகளை விடுவித்த நீதிமன்றம் மறுப்பு
நவம்பர் 11:
கருணாநிதி, ராஜ்குமார் குடும்பம் கேட்டுக் கொண்டதையடுத்து மீண்டும் காட்டுக்குச் செல்ல நெடுமாறன் ஒப்புதல்தெரிவித்தார்.
நவம்பர் 12:
நெடுமாறன், கோபால் தனிதனியே காட்டுக்குள் பயணம்.
நவம்பர் 15:
ராஜ்குமார் விடுதலை












Click it and Unblock the Notifications