"அமெரிக்க ஆயுதங்களை பாக். குறைத்து விட்டது
டெல்லி:
1965-ம் ஆண்டு இந்தியாவுடன் நடந்த போருக்குப் பின் அமெரிக்க ஆயுதங்களைபயன்படுத்துவதை பாகிஸ்தான் குறைத்துக் கொண்டு விட்டதாக அந்நாட்டு முன்னாள்ராணுவ தளபதி ஜெனரல் அலி ஹமீத் கூறியுள்ளார்.
கராச்சியில் தற்போது நடந்து கொண்டிருக்கும் சர்வதேச பாதுகாப்பு கண்காட்சியை நடத்தும்பொறுப்பை இவர் ஏற்றுக் கொண்டுள்ளார். இந்தக் கண்காட்சி குறித்து பி.பி.சி. உருதுப்பிரிவுக்கு அளித்த பேட்டியில் ஹமீத் கூறியுள்ளதாவது:
அமெரிக்க ஆயுதங்களின் பயன்பாட்டை பாகிஸ்தான் குறைத்துக் கொண்டு விட்டது.1965-ம் ஆண்டு இந்தியாவுடன் நடந்த போருக்குப் பின் அமெரிக்க ஆயுதங்களைக்குறைத்துக் கொண்டு சீன ஆயுதங்களை வாங்கத் துவங்கியது பாகிஸ்தான்.
கடந்த 25 ஆண்டுகளாக சீன ஆயுதங்களையே பெருமளவில் வாங்கி வருகிறதுபாகிஸ்தான். அமெரிக்க ஆயுதங்கள் என்று எடுத்துக் கொண்டால், சில டாங்குகளும்,எப்-16 விமானங்களும் மட்டுமே தற்போது பாகிஸ்தானிடம் உள்ளன.
1960-ம் ஆண்டுகளில் அமெரிக்காவிடம் வாங்கிய ஆயுதங்களில் பெருமளவிலானஆயுதங்களை பாகிஸ்தான் குறைத்துக் கொண்டு விட்டது.
1965-ம் ஆண்டு போருக்குப் பின் பாகிஸ்தானுக்கான தனது ஆயுத சப்ளையை அமெரிக்காநிறுத்தி வைத்தது. இதையடுத்து சீனாவிடம் ஆயுதங்களை வாங்கத் துவங்கியதுபாகிஸ்தான். 1970-ம் ஆண்டு முதல் சீனாதான், பாகிஸ்தானுக்கு அதிக ஆயுதங்கள் தரும்நாடாக உள்ளது.
ஆப்பிரிக்கா, மேற்கு ஆசியா, இந்தோனேசியா, மலேசியா ஆகிய நாடுகளுக்குபாகிஸ்தானின் ஆயுதங்களை விற்பதற்கான வாய்ப்புகள் குறித்து ஆராய கராச்சியில்நடைபெறும் கண்காட்சி உதவும்.
ஆயுத தயாரிப்பில் வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் கூட்டு திட்டங்களை பாகிஸ்தான்வரவேற்கிறது என்றார் ஹமீத்.
முன்னதாக நான்கு நாட்கள் நடைபெறும் "ஐடியாஸ்-2000 என்ற இந்தக் கண்காட்சியைபாகிஸ்தான் அதிபர் ரபீக் தரார் செவ்வாய்க்கிழமை துவக்கி வைத்தார்.
யு.என்.ஐ.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications