புலிகள் மீது குண்டுவீச்சு
கொழும்பு:
விடுதலைப்புலிகள் முகாம்கள் மீது இலங்கை விமானப்படை விமானங்கள் குண்டு வீசித் தாக்குதல் நடத்தின.
இலங்கை இனப் பிரச்சனைக்குத் தீர்வு காண நார்வே தூதுக்குழு முயற்சி மேற்கொண்டு வருகிறது. நார்வே தூதுக் குழுவினர் இலங்கை அதிபர் சந்திரிகாகுமாரதுங்கா, விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் ஆகியோரைத் தனித் தனியாகச் சந்தித்துப் பேசி பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த சமரச முயற்சி காரணமாக கடந்த ஒரு வார காலமாக இலங்கை ராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே பெரிய அளவில் மோதல்நடைபெறவில்லை.
இந்த நிலையில் புலிகளின் மீதான தாக்குதலை, இலங்கை ராணுவம் திங்கள்கிழமை முதல் தீவிரப்படுத்தியுள்ளது.
பலாய் பகுதியில் உள்ள புலிகளின் மறைவிடங்கள், முகாம்கள் மீது இலங்கை விமானப்படை வீரர்கள் குண்டு வீசித் தாக்கினர். இஸ்ரேல் நாட்டில் இருந்துவாங்கப்பட்ட போர் விமானங்கள் இதற்குப் பயன் படுத்தப்பட்டன.
இலங்கைத் தரைப்படை வீரர்கள் கூறிய இலக்குகள் மீது குண்டு வீசப்பட்டதாகவும், சேத விவரங்கள் குறித்து இன்னம் தெரியவில்லை என்றும்விமானப்படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இலங்கை தென் பகுதியில் உள்ள பலாய் வரை ராணுவம் தனது கட்டுப்பாட்டை வலுப்படுத்தியுள்ளது. பலாய் பகுதியை கைப்பற்ற இலங்கை ராணுவம் கடும்சண்டையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications