கொண்டாட்டத்தில் ரசிகர்கள்- அச்சத்தில் தமிழர்கள்
பெங்களூர்:
ராஜ்குமார் விடுவிக்கப்பட்டதையடுத்து அவரது ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் திளைத்து வருகின்றனர்.
ராஜ்குமார் விடுவிக்கப்பட்ட செய்தி வெளியாகிய உடனேயே சதாசிவ நகரில் உள்ள அவரது இல்லத்தை நோக்கிபெரும் எண்ணிக்கையிலான ரசிகர்கள் குவிந்தனர். இதனால், அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சாலைகளில் வெடிகளை வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தங்கள் மகிச்சியைத் தெரிவித்துக் கொண்டனர்.
அதே போல கர்நாடக திரைப்பட வர்த்தக சபையிலும் பெரும் எண்ணிக்கையிலான ராஜ்குமார் ரசிகர்கள் கூடினர்.நடிகர்களும், நடிகைகளும் அங்கு குழுமினர். நடிகை ஜெயந்தி, ராஜ்குமார் ரசிகர் மன்றத் தலைவர் சாரா கோவிந்துஆகியோருக்கு ரசிகர்கள் மாலை அணிவித்து தங்களது நன்றியைத் தெரிவித்தனர்.
ஜெயந்தி கூறுகையில், இந்த மகிச்சியை நாம் அமைதியான முறையில் கொண்டாட வேண்டும். யாருக்கும் எந்தப்பங்கமும் ஏற்படக் கூடாது என்றார்.
ராஜ்குமார் விடுதலைக்காக கடந்த 3 மாதங்களாக தாடி வளர்த்து வந்த அம்பரீஷ் புதன்கிழமை தாடியைஎடுத்துவிட்டு பிரஷ்ஷாக வெளியே வந்து நிருபர்களைச் சந்தித்தார்.
ராஜ்குமார் விடுதலையையடுத்து பெங்களூரில் தமிழர்களுக்கு எதிரான தாக்குதல் நடக்கலாம் என அச்சமும் நிலவிவருகிறது. இதையடுத்து நகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications