த.மா.கா.வில் இணைந்த முன்னாள் நக்சல்கள்
சென்னை:
நக்சலைட் அமைப்பான தமிழ் தேச மக்கள் விடுதலை இயக்கத்தைச் சேர்ந்தஇளவரசனின் தம்பி சுபா. செல்வம் தலைமையில் 1,000 பேர் மூப்பனார்முன்னிலையில் தமிழ் மாநில காங்கிரசில் இணைந்தனர்.
பெரம்பலூர் மாவட்டம் ஆண்டிமடம், ஜெயங்கொண்டம் ஆகிய இடங்களில் தமிழ்தேசிய மக்கள் விடுதலை இயக்கத்தினர் செயல்பட்டு வந்தனர். இவர்களை தீவிரவாதஅமைப்பு என போலீசார் அறிவித்திருந்தனர். ஆனால் இவர்கள் மீது போடப்பட்டவழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டன.
இந்நிலையில் சுபா.செல்வம் தலைமையில் 1,000 இளைஞர்கள் சென்னைசத்தியமூர்த்தி பவனில் மூப்பனாரை சந்தித்து அவர் முன்னிலையில் த.மா.கா.வில்இணைந்தனர்.
மூப்பனார் பேசுகையில், இந்தியா ஜனநாயக நாடாக விளங்குவதற்கு நேருவேகாரணம். நேருவின் பிறந்தநாளில்,. உங்கள் பாதையை மாற்றிக் கொண்டு ஜனநாயகபாதைக்கு வந்துள்ளதை பாராட்டுகின்றேன்
நீங்கள் அனைவரும் உங்கள் லட்சியத்திற்காக ஒரு பாதையை தேர்ந்தெடுதிருந்தீர்கள்.லட்சியங்கள் நிறைவேற பல பாதைகள் உள்ளன. சரியான பாதையை தேர்ந்தெடுக்கவேண்டும்.
சில காரியங்களுக்காக போராடும் போதும் அந்த காரியங்கள் நிறைவேறாமல் போகும்போது கோபம் ஏற்படும். அப்படி ஏற்படும் போது அந்தக் கோபம் நியாயமாகிறது.கோபத்துடன் செய்யும் செயல்கள் தீவிரவாதமாகின்றன.
தீவிரவாத பாதையை விட்டு ஜனநாயக பாதைக்கு நீங்கள் வந்துள்ளதுவரவேற்கத்தக்கது என்றார் மூப்பனார்.
சுபா. செல்வம் பேசுகையில் நாங்கள் மக்கள் அடிப்படை உரிமைக்காக போராட்டம்நடத்தி வந்தோம். எங்களை தீவிரவாதிகள் என கூறி போலீசார் குண்டர்கள் சட்டத்தில்சிறையில் அடைத்தனர். ஆனால் அவை பொய் என நிரூபிக்கப்பட்டு நாங்கள்நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டோம்.
இப்போது மக்கள் உரிமைக்காக போராடும் த.மா.கா.வில் இணைந்துள்ளோம் என்றார்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications