மாடிஸ் விலையைக் குறைக்கிறது தேவூ

Subscribe to Oneindia Tamil

மூன்று புதிய மாநிலங்கள் உருவாகி இருக்கின்றன. முப்பது புதிய பிரச்சனைகள் தோன்றியிருக்கின்றன.

மத்தியப் பிரதேசத்தை உடைத்து சட்டீஸ்கார் ; உத்திரப் பிரதேசத்தைப் பிரித்து உத்தராஞ்சல் ; பிஹாரைப் பிரித்துஜார்கண்ட் என்று புதிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

தலைநகரம் எது என்பதிலிருந்து, முதல்வர் யார் என்பது வரை, பல சிக்கல்கள் எழுந்துள்ளன. சட்டீஸ்காரில்பரவாயில்லை. ஜனநாயக ரீதியாகச் செயல்படுகிற காங்கிரசுக்கு ஒரு சிறிய மெஜாரிட்டி பலம் இருப்பதால்,ஜனநாயக ரீதியாக சோனியா காந்தி முதல்வரை நியமித்து விட்டார்! இப்படி நியமன முதல்வராக அஜித் ஜோகிபதவி ஏற்றதால், வி.சி சுக்லாவுக்கு வருத்தம். இந்த வருத்தம் எதிர்காலத்தில் காங்கிரஸ் அரசுக்கு பிரச்சனைகளைதோற்றுவிக்கலாம்.

இந்த புதிய மாநிலத்திற்கு வருவாய்க்கு நல்ல வழி உண்டு. தங்கம். வைரம், நிலக்கரி, இரும்பு ஆகிய கனிமப்பொருட்கள் நிறைந்த பிரதேசம் இது என்று கூறப்படுவதால், வருமானத்திற்கு வழி இருக்கும்.

ஆனால், ஆதிவாசிகளின் நலன் பல காலமாக ஒதுக்கப்பட்டிருப்பதால், அவர்களுக்கும், மற்றவர்களுக்குமிடையேபிரச்சனைகள் தோன்றக் கூடும். தீவிரவாத அபாயம் இந்த மாநிலத்தில் உடன் பிறந்த நோயாகத் திகழும்.

உத்தராஞ்சலில், சுற்றுலாதான் நல்ல வருவாயைத் தரக்கூடிய துறையாக இருக்கும். பா.ஜ.க.வுக்கு மெஜாரிட்டி பலம்இருந்தாலும், முதல்வர் பிரச்சனை இருக்கத்தான் செய்தது. இப்பொழுது நித்யானந்த ஸ்வாமி என்பவர் முதல்வராகிஇருக்கிறார். வேறு சிலருக்கு அதிருப்தி.

இதனால் பா.ஜ.க.வில் உள்கட்சி பிரச்சனைகள் தோன்றக் கூடும். இதைத் தவிர,தலைநகரமாக டேராடூன் இருக்கக்கூடாது என்ற கோஷம் வேறு கிளம்பியிருக்கிறது.

கோடைக் காலத்திற்கு ஒரு தலைநகரம், குளிர்காலத்திற்கு ஒரு தலைநகரம் என்று இரண்டு தலை அதிசயமாக இந்தமாநிலத்தை வைத்துக் கொண்டால் என்ன - என்ற யோசனையையும் சிலர் தெரிவித்திருக்கிறார்கள்.

வேறு ஒரு பிரச்சனையும் உண்டு. உத்தம் சிங் நகர், ஹரித்வார் - ஆகியவற்றை இந்த புதிய, மாநிலத்தில்சேர்த்திருக்கக் கூடாது - என்றஎதிர்ப்பு பலமாகவே இருக்கிறது. இதன் விளைவுகள் போகப் போகத்தான் தெரியும்.

இந்த மாநிலத்தில் முதல்வர் பிரச்சனை வருவதற்கு தாமதமாகலாம் ; ஆனால், இந்த மாநிலம் பிறந்ததால், உத்திரப்பிரதேச முதல்வருக்கு பிரச்சனை இப்போதே வந்து விட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+