இந்திய சிறைகளில் உள்ள இலங்கை மீனவர்கள் விரைவில் விடுதலை

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

இந்திய கடற்பகுதிக்குள் அத்துமீறி மீன் பிடித்தது தொடர்பாக, கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்களை விடுவிக்க இந்தியாசம்மததித்துள்ளதாக இலங்கை அரசு வெள்ளிக்கிழமை கூறியது.

இலங்கையிலுள்ள உயர் அதிகாரிகள் பலர், இலங்கை மீனவர்களை விடுவிப்பதற்கு வேண்டுகோள்கள் விடுத்ததைத் தொடர்ந்து இந்திய அரசு இதற்குசம்மதித்துள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

இலங்கை மீன்வளத்துறை அமைச்சகச் செயலாளர் அமரசேகரா இதுகுறித்துக் கூறுகையில், இந்தியக் கடல் எல்லைக்குள் மீன் பிடிக்கச் சென்ற 82 இலங்கைமீனவர்களை இந்திய கடற்படை வீரர்கள் கைது செய்து, சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களை விடுவிக்க வேண்டும் என்று இலங்கை மீனவ அமைப்புகள் மற்றும் தேசிய மீன்வள கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள், கடந்த சில வருடங்களாகவலியுறுத்தி வந்தனர்.

இந்திய கடற்படை வீரர்களால் கைது செய்யப்பட்ட, இலங்கை மீனவர்கள, திருவனந்தபுரம், திருச்சி, கோவா, கொச்சி, தூத்துக்குடி மற்றும் ராமேஸ்வரம்சிறைகளில் அடைக்கப் பட்டுள்ளனர். இவர்களை உடனே விடுவியுங்கள் என்று நாங்கள் வற்புறுத்திக் கூற முடியாது. ஏனெனில் அவர்கள், இந்திய கடற்படைஎல்லைக்குள் நுழைந்தது தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள்.

இந்திய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை விரைவில் விடுவிக்கக் கோரி நாங்கள் ஏற்கனவே, இலங்கை உயர் அதிகாரிகள் இருவரைஇந்தியாவுக்கு அனுப்பினோம். அவர்கள், இந்திய அதிகாரிகளுடன் இதுகுறித்து பேச்சு நடத்தினார்கள். அப்பேச்சுவார்த்தையில் இந்திய அதிகாரிகள்,இலங்கை மீனவர்களை விடுவிப்பதற்கு ஒத்துக் கொண்டுள்ளனர். இதனால் விரைவில் இந்தியச் சிறைகளிலிருந்து இந்திய மீனவர்கள் விடுவிக்கப்படுவார்கள்என்று நம்புகிறோம் என்றார் அமரசேகரா.

இதற்கிடையே, இலங்கையைச் சேர்ந்த மீனவ அமைப்புகள், இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் மஹிந்தா ராஜபக்ஸேயைச் சந்தித்து, மீனவர்களின் துயரைத்துடைக்க இந்தியாவும், இலங்கையும் சமரச உடன்பாடு செய்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ள முடிவு செய்துள்ளனர்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+