நான் என்ன சொல்ல ... கோபால்
ஈரோடு:
ராஜ்குமார் விடுதலை குறித்து தூதுக் குழுத் தலைவர் பழ. நெடுமாறன் கருத்துத்தெரிவிப்பார். தனிப்பட்ட முறையில் நான் எதுவும் சொல்ல இயலாது என்று அரசுத்தூதர் நக்கீரன் கோபால் தெரிவித்தார்.
கன்னட நடிகர் ராஜ்குமார் வீரப்பனால் கடத்தப்பட்டு 108 நாட்கள வன வாசத்திற்குப்பிறகு மீட்கப்பட்டுள்ளார்.
ராஜ்குமார் கடத்தப்பட்டவுடன் அனைவரது கவனத்திற்கும் வந்தவர் நக்கீரன் கோபால்.காரணம் அதற்கு முன் நடந்த பல "கடத்தல் நாடகங்களை சுபமாக முடித்து வைத்தவர்என்பதால்.
இந்த முறையும் அவர்தான் காட்டுக்குத் தூதராக கிளம்பிப் போனார். ஆனால்போனார், போனார் ஐந்து முறை போனார். ஒவ்வொரு முறையும் ஏதாவது கேசட்அல்லது கோரிக்கையுடன் தான் திரும்பி வந்தார்.
5-வது முறை அவர் காட்டுக்குப் போனபோது, கூடவே தமிழர் தேசிய இயக்கத்தலைவர் பழ.நெடுமாறன், பேராசிரியர் கல்யாணி, புதுவை சுகுமாறன் ஆகியோரும்புதிய தூதர்களாக சென்றனர்.
ஐந்து முறை சென்ற கோபாலால் சாதிக்க முடியாததை, தனது சமயோஜிதத்தால் 2-வதுமுறையே சாதித்து விட்டார் பழ.நெடுமாறன்.
நெடுமாறன் குழுவினரும் தூதர்களாகப் போகின்றனர் என்ற செய்தி வந்ததும்,கோபாலுக்கும், அவர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக செய்திகள்வந்தன.
கோபால்தான் அரசுத் தூதர் என்பதை வலியுறுத்தி, கோபால் தரப்பில் அறிக்கை கூடவந்தது. ஆனால் "ஹீரோவை மீட்கும் முயற்சியின் "கிளைமாக்ஸில் கதை மாறியது.கோபால் காட்டிற்குள் அழைக்கப்படவே இல்லை. நெடுமாறன் தலைமையிலானகுழுதான் நடிகர் ராஜ்குமாரை மீட்டு அழைத்து வந்து பத்திரமாக சேர்த்தது.
இந்த நிலையில் நெடுமாறனை தூதுக் குழுத் தலைவராக கோபால் ஏற்றுக்கொண்டுள்ளார். ராஜ்குமார் விடுதலை குறித்து கோபாலிடம் கருத்து கேட்டபோது,நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை. தனிப்பட்ட முறையில் நான் பேச முடியாது. தூதுக்குழுவின் தலைவர் நெடுமாறன். அவர்தான் இதுகுறித்துக் கருத்துக் கூற முடியும் என்றுகூறிவிட்டு நிறுத்திக் கொண்டார்.
இந்த சுப முடிவு குறித்து நெடுமாறன் கருத்துத் தெரிவிக்கையில், எங்களது மனிதநேயப்பணி சுபமாக முடிந்துள்ளது. எங்களுக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்ப பத்திரமாக,சரியாக முடித்து விட்டோம்.
வீரப்பனுடன் பேசியது குறித்து தமிழக முதல்வர் கருணாநிதியிடம்தெரிவிக்கவுள்ளோம். அதன் பிறகே செய்தியாளர்களுக்கு விளக்கப்படும். எங்களதுமனிதநேயப் பணி தொடரும் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications