"வீரப்பனுக்கு நெடுமாறன் உறுதிமொழி தந்துள்ளார்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
வீரப்பன் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் அளித்த உத்தரவாதத்தின் பேரில்தான் ராஜ்குமாரை வீரப்பன்விடுவித்துள்ளதாக தமிழக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
சென்னையில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த அவர், நெடுமாறன்அளித்த உறுதிமொழியின் பேரில்தான் ராஜ்குமாரை வீரப்பன் விடுவித்துள்ளான்.
வீரப்பனுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது குறித்து இப்போது எதுவும் கூற முடியாது.
வீரப்பனுக்கும், தூதுக்குழுவுக்கும் இடையே நடந்த உரையாடல்கள் குறித்தும்இப்போது எதுவும் கூற முடியாது.
சென்னைக்கு வருவதாக ராஜ்குமார் கூறியுள்ளார். ஆனால் எப்போது வருவார் என்பதுதெரியவில்லை என்றார் கருணாநிதி.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications