"கோடீஸ்வரன் நிகழ்ச்சிக்குத் தடை வருமா?
சென்னை:
சன் டி.வி.யில் ஒளிபரப்பப்படும் "கோடீஸ்வரன் நிகழ்ச்சிக்கும், விஜய் டி.வி.யில்ஒளிபரப்பபப்டும் "மகா லட்சாதிபதி நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்குமாறு தொடர்ந்தவழக்கில் இரு டிவி நிறுவனங்கள் உட்பட 6 பேருக்கு சென்னை உயர் நீதிமன்றம்நோட்டீஸ் அனுப்பியது.
சேலத்தைச் சேர்ந்த ஆடிட்டர் பாலு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்திருந்தார். மனுவில் அவர் கூறியிருந்ததாவது:
"ஸ்டார் பிளஸ் சானலில் நடிகர் அமிதாப் பச்சன் நடத்தும் "குரோர்பதி நிகழ்ச்சிதொலைக் காட்சி ரசிகர்களிடையே அமோகமான வரவேற்பை பெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து விஜய் டி.வி.யில் "மகா லட்சாதிபதி என்ற நிகழச்சி ஒளிபரப்பப்பட்டுவருகிறது.
கடந்த 11-ம் தேதி முதல் சன் டி.வி.யில் "கோடீஸ்வரன் என்ற நிகழ்ச்சிஒளிபரப்பப்பட்டு வருகிறது. இது போன்ற நிகழ்ச்சிகள் சூதாட்டம் போன்றவை.மேலும் 1955-ம் ஆண்டு பரிசுப்போட்டி சட்டப்படி ரூ 1,000-க்கு மேல் பரிசு வழங்கக்கூடாது.
இந்த நிகழ்ச்சிகள் சட்டப்படி விதி மீறல். எனவே இந்த போட்டிகளுக்கு தடை விதிக்கவேண்டும். இந்த நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில்கூறியிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.கே.ஜெயின் முன்விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதி, சன், விஜய் டி.வி. நிறுவனங்கள், மத்திய தகவல்ஒளிபரப்புத் துறை செயலர், தமிழக உள்துறை செயலர், தமிழக டி.ஜி.பி. மற்றும்சென்னை போலீஸ் கமிஷனர் உள்ளிட்ட 6 பேருக்கு நோட்டீஸ் அனுப்புமாறுஉத்தரவிட்டார்.
இந்த நோட்டீசுக்கு 4 வாரங்களில் பதிலளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
-
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications