ஊட்டியில் திமுக எம்.எல்.ஏ.வுக்கு அடி
ஊட்டி:
ஊட்டியில் பொதுமக்களைச் சந்திக்கச் சென்ற தி.மு.க., எம்.எல்.ஏ.,வின் சட்டை, பேன்ட்டை கிழித்து அனுப்பியது ஒரு கும்பல். எம்.எல்.ஏ அணிந்திருந்தபெல்ட்டால் அவருக்கு அடி விழுந்தது. காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
ஊட்டி தி.மு.க. எம்.எல்.ஏ. குண்டன், பொதுமக்களைச் சந்திக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார். நீலகிரியில் தேயிலை பிரச்னையில் ஆளும் கட்சிக்குஏற்பட்ட கெட்ட பெயர் இன்னும் நீடித்து வருகிறது. இந்நிலையில், போராட்டம் நடந்த காத்தாடி மடம், மீக்கேரி ஆகிய பகுதிகளுக்குஎம்.எல்.ஏ.,சென்றார். மீக்கேரியில், தேயிலைப் போராட்டம் நடந்தபோது, அப்பகுதியைச் சேர்ந்த சில இளைஞர்களைப் போலீசார் அரை நிர்வாணமாகஅழைத்துச் சென்றிருந்தனர். இதுதொடர்பாக விசாரணையும் நடந்து வருகிறது.
இந்த நிலையில், மீக்கேரி கிராமத்திற்குச் சென்ற எம்.எல்.ஏ.,குண்டனை அங்குள்ள கட்சிப் பிரமுகர்கள் அதிகாரிகள் ஆகியோர் வரவேற்றனர்.இக்கிராம மக்கள், எம்.எல்.ஏ.,விடம், தேயிலைக்கு விலை கிடைக்க எம்.பி.,யுடன் இணைந்து பாடுபட வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.பின்னர், தனது காரை நிறுத்தி விட்டு மணியபட்டி கிராமத்திற்கு நடந்து சென்றார்.
அங்கு மீக்கேரியில் நடந்த சம்பவம் குறித்து குண்டனிடம் பொதுமக்கள் கேள்வி எழுப்பினர். அரை நிர்வாணப்படுத்தி அனுப்பிய சம்பவத்திற்கு பின் ஏன் வந்துபார்க்கவில்லை என கேட்டனர். அவர்களைச் சமாதனப்படுத்தி விட்டு, சின்னிமணியபட்டிக்குச் சென்றார். அங்கு மக்களைச் சந்தித்து விட்டு காட்டுப் பாதைவழியாக காருக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியில் இருந்த 20 பேர் கொண்ட கும்பல், தேயிலை பிரச்னை குறித்து மீண்டும் கேள்வி எழுப்பியது. மேலும், எம்.எல்.ஏ.,வைத்தரக்குறைவாகப் பேசத் தொடங்கினர். திடீரென எம்.எல்.ஏ.,மீதும், அவருடன் வந்த கும்பல் மீதும் சாணியை வீசத் தொடங்கினர். மேலும், திடீரெனஅந்தக் கும்பல், எம்.எல்.ஏ வின் சட்டையைப் பிடித்து கிழித்தது.
அவர் அணிந்திருந்த பேண்டும் தப்பவில்லை. பேண்ட் கிழிக்கப்பட்டது. மேலும், பேண்ட்டில் இருந்த பெல்ட்டை கழற்றி அதனாலயே எம்.எல்.ஏ,வைஅடிக்கத் தொடங்கியது. கழுத்தில் கிடந்த தங்க செயின் மற்றும் மொபைல் போன் ஆகியவற்றை பறித்தது. தாக்குதலில், எம்.எல்.ஏ.,வின் காலில்காயம் ஏற்பட்டு ரத்தம் வந்தது.
பின்னர் இளித்துரையைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரின் மொபைல் போனை பறித்து கீழே போட்டு உடைத்தனர். எம்.எல்.ஏ. மற்றும் குழுவினர்கும்பலில் இருந்து தப்பி காரை நோக்கி ஓடினர். ஆனால் அங்கு கார் இல்லை. இதனால் அதிர்ந்து போனார் எம்.எல்.ஏ.
சம்பவம் குறித்து கேள்விப்பட்ட மீக்கேரி கிராமத்தினர் விரைந்து வந்து எம்.எல்.ஏ.,விற்கு வேட்டி சட்டை கொடுத்து காரில் ஏற்றி பாதுகாப்பாகவழியனுப்பி வைத்தனர்.
ஊட்டி திரும்பிய எம்.எல்.ஏ., தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இது தொடர்பாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து குமார்,சந்திரன் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். சம்பவம் குறித்து எம்.எல்.ஏ. குண்டன், தமிழக முதல்வர் கருணாநிதியுடன் போனில் பேசினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications