நார்வே தூதரகம் முன்பு சிங்களர்கள் போராட்டம்
கொழும்பு:
இலங்கைப் பிரச்சனையில் நார்வே தூதுக் குழுவினர் தலையிடக் கூடாது என்று கூறி சிங்கள வலதுசாரி அமைப்பைச் சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தியதைத்தொடர்ந்து, நார்வே தூதரகத்துக்குப் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இலங்கை இனப் பிரச்சனைக்குத் தீர்வு காணும் முயற்சியில் நார்வே தூதுக்குழு இறங்கியுள்ளது. முதல் கட்டமாக தூதுக்குழுவினர் விடுதலைப் புலிகள் தலைவர்வேலுப்பிள்ளை பிரபாகரனையும், அதிபர் சந்திரிகா குமாரதுங்காவையும் சந்தித்துப் பேசினர்.
இலங்கை இனப் பிரச்சனைக்குத் தீர்வு காணும் வகையில் நார்வே எந்த சமரச முயற்சியிலும் ஈடுபட வேண்டாம் என சிங்கள வலதுசாரி அமைப்பினர்எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இலங்கையில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள சிங்கள உருமாயா கட்சியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் நார்வே தூதரகத்தை நோக்கிவியாழக்கிழமை இரவு ஊர்வலம் சென்றனர். தூதரகத்துக்குச் செல்லுமுன் போலீஸார் அவர்களைத் தடுத்து நிறுத்தினர்.
நவம்பர் 1 ம் தேதி, நார்வே தூதுக் குழுத் தலைவர் எரிக் சோல்ஹெம், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை வவுனியாவில் சந்தித்துப் பேசினார். இதைஎதிர்த்து சிங்கள உருமாயா கட்சியினர், எரிக் சோல்ஹெமின் கொடும்பாவியை எரித்தனர்.
மேலும் நார்வே நாட்டினர் எப்போதும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயல்படுபவர்கள். அவர்களால் எப்படி இலங்கையில் அமைதி ஏற்படுத்தமுடியும்?
அந்நாட்டு அரசியலமைப்பு பிரிவினைவாதத்தைத் தூண்டும் வகையிலும், சிறுபான்மையினர் எதிராக செயல்படும் வகையிலும் இருக்கிறது. இந்நிலையில்நார்வே எப்படி சமரச முயற்சியில் ஈடுபடமுடியும்? என்று கேள்வி எழுப்பினர்.
நாடாளுமன்றத்தில் 10 எம்.பி.க்களைக் கொண்ட ஜனதா விமுக்தி பெருமுனா கட்சியும் நார்வே சமரச முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
யு.என்.ஐ.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications