மோசடி செய்கிறது மத்திய அரசு ..ஜெயேந்திரர் ஆட்சேபம்
விழுப்புரம்:
பத்தாம் வகுப்பு வரை தேர்வு கிடையாது என்று மத்திய அரசின் புதிய கல்விதிட்டத்திற்கு காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
விழுப்புரத்தில் நிருபர்களை சந்தித்த ஜெயேந்திர சுவாமிகள் கூறியதாவது:
இந்தியாவில் வாழ்கின்ற அனைவருமே இந்தியர்கள் தான். தமிழ்நாட்டில் மதத்தால்பிரிந்து இருந்தாலும் தமிழையும், தமிழ் கலாச்சாரத்தையும் ஏற்றுக் கொள்வது போல்இந்தியாவில் வாழ்கின்ற அனைத்து மதத்தினரும் கலாச்சாரத்தையும் ஏற்றுக் கொள்ளவேண்டும்.
மத்திய அரசு புதிய பள்ளி கல்வித் திட்டத்தை அறிவித்துள்ளது. அதில் பத்தாம்வகுப்பில் மட்டும் தேர்வு எழுதினால் போதும் என்று கூறியுள்ளது. இது மிகப் பெரியமோசடி ஆகும். பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் போது பெரும் பகுதி மாணவர்கள்தேர்ச்சி பெற முடியாது.
இதனால் வேலை வாய்ப்புக்கு போட்டி போடும் இளைஞர்களைக் குறைக்கமோசடியான இந்த திட்டத்தை உருவாக்கியுள்ளது. இதனால் மாணவர்களின் கல்விவளர்ச்சி முற்றிலும் பாழாகி போய்விடும். எனவே மத்திய அரசு இந்த திட்டத்தையோசித்து செய்ய வேண்டும்.
ராஜ்குமார் விடுவிக்கப்பட்டது எல்லோருக்கும் சந்தோஷத்தை அளிக்கிறது. இனிமேல்இரு மாநில அரசுகளும் இதுபோல் ஒரு சம்பவம் நடக்காமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.
ஏழை பெற்றோர்களிடம் கடன் வாங்கியாவது தனது குழந்தைகளை தனியார்பள்ளிகளில் படிக்க வைக்க வேண்டும். தனது குழந்தைகள் மம்மி,டாடி என்று சொல்லவேண்டும் என்ற மோகம் ஏற்பட்டுள்ளது.
இதனால் அரசு பள்ளிகள் நகராட்சி பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறாதஅரசு மற்றும் நகராட்சி பள்ளிகளை தனியாரிடம் ஒப்படைத்து செயல்பட வைக்க அரசுசட்ட விதிமுறைகளை மாற்றம் செய்ய வேண்டும்.
அப்பொழுது சக்தியாலும், பொருளாதாரத்திலும் பின் தங்கியவர்களின்குழந்தைகளுக்கு கட்டண சலுகைகளை வழங்கி அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.செயல்படாத எந்த பள்ளியையும் ட்ரஸ்ட் அமைத்து காஞ்சி சங்கர மடத்திடம்வழங்கினால், மடம் பொறுப்பெடுத்து செயல்படுத்த தயாராக இருக்கிறது.
மார்கழி மாதம் தொடங்கப் போகிறது. இந்த சமயத்தில் மாணவ, மாணவிகள்திருப்பாவை, திருவெம்பாவை படிக்க வேண்டும்.பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம்ஜனகல்யாண் 98-99 லஸ் சர்ச் ரோடு, மயிலாப்பூர், சென்னை என்கிற முகவரிக்குவிண்ணப்பித்தால் இந்த இரு புத்தகங்களும் இலவசமாக அனுப்பி வைக்கப்டும்.
காஞ்சி சங்கரமடத்தின் இந்து மிஷன் சார்பில் மூன்று இலக்கிய போட்டிகள்நடத்தப்பட்டுள்ளது. நான்காவது போட்டியாக பெரிய புராணத்தில் வாழ்க்கைபண்புகளை தொகுத்து கட்டுரை போட்டி நடத்தப்பட்டுள்ளது. இதற்கான கட்டுரைத்தொகுப்பு டிசம்பர் மாதம் 31-ம் தேதிக்குள் காஞ்சி சங்கர மடத்தின் இந்து மிஷனுக்குவந்து சேர வேண்டும்.
ராமேஸ்வரத்தில் உள்ள கோவிலின் வடக்கு மற்றும் தெற்கு ராஜகோபுரம் அமைக்கும்பணியை தொடக்கி வைத்துள்ளேன். இதற்கான பணியை மடம் செய்ய உள்ளது.
இதற்காக நிதி வழங்க விரும்புவோர் , ராமேஸ்வரம் ராஜகோபுரம் திருப்பணி, காஞ்சிசங்கரமடம், காஞ்சிபுரம் என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம் என்று நிருபர்களிடம்கூறினார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications