கணவன் அடிப்பதை ஏற்றுக் கொள்ளும் இந்தியப் பெண்கள்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

கணவன் தன்னை அடிப்பதை இந்தியப் பெண்கள் எதிர்க்கவில்லை என்று 2-வது தேசிய குடும்ப நல ஆய்வில்தெரிய வந்துள்ளது.

இந்தியாவில் பெண்களின் உரிமைக்காகவும், அவர்களுக்கு எதிராக நடக்கும் வன்முறையை எதிர்த்து மாதர்சங்கங்கள் எவ்வளவுதான் போராடி வந்தாலும், கணவன், மனைவியை அடிப்பது உள்ளிட்ட பல வீட்டுக்கொடுமைகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

இந்தியா முழுவதிலும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 90, 000 பெண்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது. இதில்,இந்திய சமுதாயம் ஆணாதிக்கம் நிறைந்தது என்பதை 56 சதவீத பெண்கள் ஒப்புக் கொள்கின்றனர். ஆதிக்கமனப்பான்மை கொண்ட ஒரு ஆண் அல்லது கணவன் தனது மனைவி நல்லவளாக, சமுதாய ஒழுக்கங்களுக்குக்கட்டுப்பட்டவளாக இருக்க வேண்டும் என நினைக்கிறான். இதை அவர்கள் மீறும் போது அவர்களை அடிப்பதைத்தவிர வேறு வழியில்லை என்று நினைக்கிறான்.

வீட்டை அவமதித்தாலோ அல்லது குழந்தைகளை கவனிக்காமல் விட்டாலோ அடித்துத் துன்புறுத்தப்படுவதாக 40சதவீதம் பெண்கள் தெரிவித்தனர். கணவனிடம் சொல்லாமல் வெளியில் போனால், கணவன் தங்களை அடிப்பதாக30 சதவீதம் பேர் தெரிவித்தனர். இதைத் தவிர, தங்களிடம் நல்லவர்களாக கணவன்கள் நடந்து கொள்வதாகவும்இந்தப் பெண்கள் தெரிவித்தனர்.

கணவனின் குடும்பத்தாரை மதிக்காவிட்டால் கணவன் தங்களைக் கொடுமைப் படுத்துவதாகத் 34 சதவீதம்பெண்கள் தெரிவித்தனர். தங்களின் நடத்தையில் சந்தேகப்பட்டுக் கொடுமைப் படுத்துவதாக 33 சதவீதம் பெண்கள்தெரிவித்தனர்.

ருசியாக சமைக்காதது, கணவரது வீட்டில் கேட்டபடி நகை, பணம் மற்றும் இதர ஆடம்பர பொருட்களைக்கொடுக்காததாலும் சில பெண்கள் துன்புறுத்தப்படுகிறார்கள். இந்தக் காரணத்துக்காகத் துன்புறுத்தப்படும் பெண்கள்மிகச் சிலரே. அதாவது 25 சதவீதம் பெண்களே இக்காரணங்களால் பாதிக்கப்படுகின்றனர்.

பெண்களின் முன்னேற்றத்தில் கல்வி பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதும் இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.பெண்கள் தாங்கள் கணவன்மார்களால் தாக்கப்படுவது குறித்து விழிப்புணர்வை கல்வியறிவு கொடுத்துள்ளதுஇதன் மூலம் தெரிய வந்துள்ளது. நகர்ப்புறங்களில் வாழும் பெண்களிடையே கல்வி, நல்ல விழிப்புணர்வைஏற்படுத்தியுள்ளது.

27 சதவீத சீக்கியர்களும், 39 சதவீத ஜெயின் இனப் பெண்களும் காரணமே இல்லாமல் கணவன் தங்களைஅடிப்பதைத் தாங்கிக் கொள்ள முடியாது என்று கூறுகிறார்கள்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+