வீரப்பன் விவகாரம் புலிகளுக்குத் தோல்வி.. சுவாமி
சென்னை:
வீரப்பன் குறித்து மத்திய புலனாய்வுத் துறை, பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பியஅறிக்கையை வெள்ளை அறிக்கையாக மத்தியஅரசு வெளியிட வேண்டும் என்றுதமிழக ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணிய சுவாமி கூறியுள்ளார்.
சென்னையில் அவர் விடுத்தள்ள அறிக்கயிைல் கூறியிருப்பதாவது:
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொன்ற, தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள்இயக்கத்துடன் தொடர்பு உள்ள தமிழர் தேசிய இயக்கத் தலைவர் நெடுமாறனுடனும்,திராவிடர் கழகத் தலைவர் வீரமணியுடனும் தொடர்பு வைத்திருந்ததற்காக காங்கிரஸ்கட்சி மன்னிப்பு கோர வேண்டும்.
வீரப்பன் விவகாரத்தில், விடுதலைப் புலிகளின் திட்டத்தை சுப்ரீம் கோர்ட்டின்உறுதியான நடவடிக்கை முறியடித்து விட்டது. சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பால்,விடுதலைப் புலிகளின் திட்டம் பலிக்கவில்லை.
மக்கள் கண் முன், நெடுமாறனும், வீரமணியும் தேசத் துரோகிகளாகவேகாட்சியளிக்கின்றனர். ராஜ்குமார் கடத்தல் நாடகம் விடுதலைப் புலிகளுக்கு மிகப்பெரிய இழப்பாகும் என அவர் கூறியுள்ளார்.
வீரப்பனைப் பிடிக்க வேண்டும் ..வாழப்பாடி
முன்னாள் மத்திய அமைச்சரும், தமிழக ராஜீவ் காங்கிரஸ் கட்சித் தலைவருமானவாழப்பாடி ராமமூர்த்தி கூறுகையில், நடிகர் ராஜ்குமார் மீட்கப்பட்டு விட்டதால்தமிழக, கர்நாடக அரசுகள் இணைந்து வீரப்பனை பிடிக்கும் முயற்சியில் ஈடுபடவேண்டும் என கூறியுள்ளார்.
டெல்லி சென்றிருந்த வாழப்பாடி ராமமூர்த்தி அங்கு, பிரதமர் வாஜ்பாய் மற்றும் மத்தியஉள்துறை அமைச்சர் அத்வானியை சந்தித்தார். சென்னை திரும்பிய அவர்செய்தியாளர்களிடம் பேசுகையில், இரு மாநில அரசுகளும் வீரப்பனை பிடிக்கவிரைந்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அதிரடிப்படையை அனுப்பி வீரப்பனைபிடிக்க வேண்டும்.
ராஜ்குமார் விடுதலையானது மகிழ்ச்சியளிக்கிறது.ஆனால் நெடுமாறனை தூதராகஅனுப்பியதற்காக கருணாநிதி வருந்த வேண்டி வரும். ஏனென்றால் நெடுமாறன்,ராஜ்குமார் விடுதலை தமிழக அரசு கொடுத்த உத்தரவாதத்தின் பேரில்தான் நடைபெற்றது என கூறுவார். அது பல பிரச்னைகளை ஏற்படுத்தும்.
வீரப்பனையும் அவனது கூட்டாளிகளையும் விரைந்து பிடிப்பதுஅவசியம்.ஏனென்றால் அவன் தமிழ் தீவிரவாதிகளுடன் தொடர்பு வைத்திருக்கிறான்.அவர்கள் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளுடன் தொடர்பு உள்ளவர்கள்.
வீரப்பன் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு நாட்டின் பெருமையைக்காப்பாற்றியிருக்கிறது.
ராஜ்குமார் கடத்தல் நாடகம் வீரப்பனைச் சுற்றியிருக்கும் தமிழ் தீவிரவாதிகளால்நடத்தப்பட்டது. அவர்கள் தீவிரவாத நடவடிக்கைகள் மட்டுமே தடா கைதிகளைவிடுவிக்க முடியும் என்ற எண்ணத்தில் கடத்தலில் ஈடுபட்டனர்.
அதிரடிப்படை வீரப்பனை பிடிக்க காட்டிற்குள் செல்லக் கூடாது என நெடுமாறன்கூறியிருப்பது கண்டனத்திற்குரியது என கூறினார்.
வீரப்பனுக்கு பணம் கொடுத்திருக்கப்படுமா என நிருபர்கள் கேட்டபோது இந்தகடத்தல் நாடகம் தொடர்பான அனைத்து உண்மைகளும் விரைவில் வெளி வரும்என்றார்.
யு.என்.ஐ.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications