உருவாகிறது இளம் அதிரடிப்படை
கோவை:
வீரப்பனைப் பிடிக்க புதிய அதிரடிப்படையை உருவாக்க அரசு திட்டமிட்டுள்ளது.இதற்கென போலீஸ் படையில் ஆட்களைத் தேர்வு செய்யும் பணி துவங்கியுள்ளது.
யானைகளின் தந்தங்கள் உட்பட சந்தனக் கட்டைகளைக் கடத்தி,நூறுக்கும் மேற்பட்டகொலைகளைச் செய்து, காட்டுக்குள் தனி ராஜ்யம் நடத்தி வந்தவர் வீரப்பன்.
பொருத்தமான பெயரைச் சூடியுள்ள வீரப்பன், கடந்த பல ஆண்டுகளாக கடத்தல்நாடகத்தை ஆண்டுதோறும் நடத்தாமல் இல்லை. போலீசுக்குத் தண்ணி காட்டி வந்தமாயாவி வீரப்பனின் புகழைக் கேள்வியுற்ற தீவிரவாத இயக்கம், தங்கள் ராஜ்ஜியத்தைஉருவாக்க காடு ஒன்று தான் சிறந்த வழி என எண்ணி, வீரப்பனுடன் கூட்டணியும்சேர்ந்து விட்டனர்.
இப்போது வீரப்பனுக்கென தனி "தமிழ்தேசம் தொடங்கி விட்டது. இருமாநிலங்களுக்கும் பொதுவான ஒரு பகுதியில் தனது கொடியை நாட்டியுள்ளதீவிரவாத இயக்கத்தின் முகம், கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தலின்போது தான்வெளிச்சத்திற்கு வந்தது.
நாட்டிற்குள்ளேயே தனி நாடு ஒன்றை உருவானது போல் சட்டம் ஒழுங்கில்இப்பகுதியில்லை என்பதை அறிந்த உச்சநீதிமன்றம், இரு மாநிலங்களைக்கும் "சூடுபோட்டது.
ராஜ்குமாரை எப்படி விடுவிப்பது என தலையைப் பிய்த்துக் கொண்டிருந்த மாநிலஅரசுகளுக்கு இந்த "சூடு மேலும் வேதனையைத் தந்தது. தடா கைதிகளைவிடுவிக்கமால், ராஜ்குமார் விடுதலை செய்யப்பட்டு விட்டார். உச்சநீதிமன்றம் இதில்வெற்றி வாகை சூடியது.
ஆனால், இனியாவது வீரப்பனைப் பிடிப்பார்களா? என பொதுமக்கள் ஆவல்இப்போது பெரும் அலையாக எழுந்துள்ளது.
பல தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பு கொண்டு, காட்டுக்குள் வேர் விட்டிருக்கும்தீவிரவாதத்தை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்ற எதிரொலி தான்இப்போது தமிழகத்தில் பொதுமக்களின் எண்ணமாக மாறியுள்ளது.
நக்கீரன் கோபால், நெடுமாறன், சுகுமாறன் என தூதுக் குழு செல்லும் இந்தக்காட்டிற்குள் அதிரடிப்படையால் ஏன் செல்ல முடியாது என்ற கேள்வி இப்போதுமக்களிடம் எழுந்துள்ளது.
தேச விரோதக் கும்பல் ஒன்று காட்டுக்குள் உருவாகி வருவதை எப்படி அரசுஅனுமதிக்கப் போகிறது?. இந்தக் கும்பல் நாளை தங்களது தனி தேசத்தின்அங்கீகாரத்திற்காக யாரை வேண்டுமானாலும் கடத்திச் செல்லக் கூடிய வாய்ப்புஏற்படும்.
இங்கும் இன்னொரு காஷ்மீர் உருவாக வேண்டுமா?. அரசு பொருத்திருந்தது போதும்,இதுவே வீரப்பனைப் பிடிக்கத் தக்க தருணம் என ஆங்காங்கே விவாதங்களின் மூலம்மக்களின் ஆதங்கம் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன. அரசு உணர்ந்து செயல்படவேண்டும்.
இனியும் வீரப்பனின் கோரிக்கை என முக்கியத்துவம் கொடுத்தால், அதுதீவிரவாதத்திற்குக் கொடுக்கும் அங்கீகாரம் ஆகி விடும். எனவே, இப்போது அரசும்,பொதுமக்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் விதமாக அதிரடி ஆபரேஷனில்இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கான ஏற்பாடுகளில் இப்போதே இறங்கி விட்டது எனக் கூறலாம். இதன் முதல்கட்டமாக அனத்துக் காவல் நிலையங்களுக்கும் அரசு ஒரு சர்குலர் அனுப்பியுள்ளது.
இந்த சர்குலரில், இளம் போலீசாரைத் தேர்வு செய்ய உத்தரவுபிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.வீரப்பனைப் பிடிக்கத் துடிக்கும்அதிரடிப்படைக்கு ஒரு வாய்ப்பை அரசு ஏற்படுத்திக் கொடுக்கவுள்ளது.
எனவே, உடற்கட்டு மிக்க போலீஸ் படையினர் தேர்வு செய்யப்பட்டு, இவர்களுக்குவிரைவிலேயே சிறப்பு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடந்துவருகின்றன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications