அரசியல் ஆதாயத்திற்காக நெடுமாறன் காடு செல்லவில்லை
பெங்களூர்:
வீரப்பனைக் கைது செய்த பிறகே அவனுக்கு பொது மன்னிப்புத் தருவதா, வேண்டாமாஎன்பதைப் பற்றியே பேச முடியும் என்று கர்நாடக மாநில முன்னாள் டி.ஜி.பி.ஸ்ரீனிவாசுலு கூறினார்.
ராஜ்குமார் விடுதலை விவகாரத்தில் ஸ்ரீனிவாசுலுவும் மறைமுகமாக செயல்பட்டார்என்று கூறப்படுகிறது. முன்னாள் டி.ஜி.பியான ஸ்ரீனிவாசுலு தற்போது வானவில் என்றஅமைப்பின் காப்பாளராக இருக்கிறார்.
ராஜ்குமார் விடுதலை குறித்து செய்தியாளர்களிடம் ஸ்ரீனிவாசுலு கூறியதாவது:
வீரப்பனுக்குப் பொது மன்னிப்பு கொடுக்க வேண்டும் என்று தமிழர் தேசிய இயக்கத்தலைவர் பழ .நெடுமாறன் கூறியுள்ளார். இதுகுறித்து சமூக சேவை அமைப்பின்காப்பாளர் என்ற முறையில் சொல்வதானால், நெடுமாறன் கருத்தை ஏற்றுக்கொள்ளவும் இல்லை, மறுக்கவும் இல்லை.
முன்னாள் காவல்துறை அதிகாரி என்ற வகையில கருத்துச் சொல்வதானால், ஒருகுற்றவாளி கைது செய்யப்பட்ட பின்னரே, அவனை மன்னிப்பதா, இல்லையா என்றுசட்டம் மூலம் முடிவு செய்ய முடியும்.
முன்பு ஒருமுறை சரண் அடைவது குறித்து வீரப்பன் தெரிவித்தான். ஆனால் அதுநடக்கவில்லை. மேலும் வீரப்பன் இப்போது கைது செய்யப்படவும் இல்லை. எனவேபொதுமன்னிப்பு குறித்த கேள்வியே எழவில்லை.
நெடுமாறன் ஒரு காந்தீயவாதி. கொள்கைவாதி. மனிதாபிமான அடிப்படையில்தான்ராஜ்குமாரை மீட்பதற்காக காட்டுக்குச் சென்றார் அவர். அரசியல் ஆதாயம் காண இதைஅவர் செய்யவில்லை.
நெடுமாறன் எனக்குப் புதியவரல்ல. 1978-ம் ஆண்டு மதுரையில், அப்போதையபிரதமர் இந்திரா காந்தி வந்தபோது, தாக்கப்பட்டார். அப்போது தனது உயிரையும்பொருட்படுத்தாது அவரைக் காத்தவர் நெடுமாறன். அப்போதிருந்தே எனக்கு அவரைநன்றாகத் தெரியும். மேலும், ராஜ்குமார் மீது மிகுந்த அக்கறை கொண்டவர்நெடுமாறன்.
ராஜ்குமார் மீட்பு விவகாரத்தில், தமிழக, கர்நாடக அரசுகளின் நடவடிக்கைகள்பாராட்டத்தக்கது. கர்நாடக அரசு மற்றும் மாநில புலனாய்வுத் துறை அதிகாரிகளின்ஆசியுடன்தான் நெடுமாறன் பயணத்திற்கு வானவில் அமைப்பு உதவியது.
ராஜ்குமாரை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பலன் கொடுத்தது மகிழ்ச்சியைத்தருகிறது. இந்தச் சூழ்நிலையில் இரு மாநில அரசுகளும் தங்களது வாக்குறுதிகளைமறக்காமல் நிறைவேற்ற வேண்டும். தடா கைதிகளின் வழக்குகளை விசாரிக்க சிறப்புநீதிபதி நியமிப்பது, அதிரடிப்படை வீரர்களால் கொல்லப்பட்டவர்களின்குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்குவது, தடா கைதிகள் ஜாமீனில் வெளிவரஉதவுவது, பெங்களூரில் திருவள்ளுவர் சிலையும், சென்னையில் சர்வக்னர் சிலையும்திறக்கப்படுவது உள்ளிட்ட உறுதி கூறிய அனைத்தையும் மறக்காமல் நிறைவேற்றவேண்டும் என்றார்.
கமாண்டோ நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்
இதற்கிடையே, மற்றொரு செய்தியாளர்கள் கூட்டமொன்றில் பேசிய வானவில்அமைப்பின் தலைவர் பி.ஜி.கோஷி கூறுகையில், இதுபோன்ற சம்பவங்களில்வானவில் அமைப்பு பலவிதங்களில் உதவியுள்ளது. தமிழர்களின் நலனுக்காகவேநெடுமாறன் இந்தப் பயணத்தை மேற்கொண்டார்.
பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்தபோதே, கமாண்டோ நடவடிக்கைக்கும் மாநிலஅரசுகள் தயாராகியிருக்க வேண்டும்.
தமிழர்களின் நலனுக்காக வீரப்பன் இந்த கடத்தலை மேற்கொண்டிருந்ததால், தமிழகஅரசு கமாண்டோ நடவடிக்கையை எதிர்த்திருக்கலாம்.
108 நாட்கள் ராஜ்குமார் காட்டில் இருந்தாலும், அவரை வீரப்பன்கொடுமைப்படுத்தவில்லை என்றார் கோஷி.
கோஷி, முன்னாள் பெங்களூர் போலீஸ் கமிஷனர் என்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications