கிரிக்கெட் வீரர்கள்-தாதாக்கள் தொடர்பு குறித்து சி.பி.ஐ. விசாரணை
டெல்லி:
இந்திய கிரிக்கெட் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வாரியங்களின் நிர்வாகிகளுக்கு,தாதாக்களுக்கும் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்திவருவதாக சி.பி.ஐ. இணை இயக்குநர் ஆர்.என்.சவானி கூறியுள்ளார்.
இவர்தான் மேட்ச் பிக்ஸிங் குறித்த விசாரணையை மேற்கொண்டு அரசிடம் 162 பக்கஅறிக்கையை சமர்ப்பித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து சி.பி.ஐ. இணை இயக்குநர் ஆ.என்.சவானி கூறுகையில், கிரிக்கெட்உலகத்தினருக்கும், தலைமறைவு தாதாக்களுக்கும் தொடர்பு ஏதும் இருக்கிறதா என்பதுகுறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது.
சில கிரிக்கெட் வீரர்களுக்கு தாதாக்களுடன் உள்ள தொடர்பை வெளியே கொண்டுவரவும் முடிவு செய்திருக்கிறோம். இவர்களால், கிரிக்கெட்டிற்கும், நாட்டுக்கும்எந்தவிதமான பாதிப்பும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதால் இந்த முடிவைஎடுத்திருக்கிறோம்.
மேட்ச் பிக்ஸிங் தொடர்பான விசாரணை முடிந்து, அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டுவிட்டது. தற்போது தாதாக்களுக்கும், கிரிக்கெட் வீரர்களுக்கும் இடையிலானதொடர்பைக் கண்டுபிடிப்பதில் நாங்கள் தீவிர கவனம் செலுத்தி வருகிறோம்.
தாதாக்களுடன் தொடர்பு உள்ளதாக சந்தேகப்படும் வீரர்கள், அதிகாரிகள் பெயரைஇப்போதைக்கு வெளியிட முடியாது. அவர்களிடம் இப்போதைக்கு எந்தவிசாரணையும் நடத்தப்படவில்லை. இதுகுறித்து அவர்களிடம் பேசியுள்ளோம்.
மேட்ச் பிக்ஸிங் புகார் குறித்து சி.பி.ஐ. நடத்திய நான்கு மாத விசாரணையின்போது,சில கிரிக்கெட் வீரர்களுக்கும், தாதாக்களுக்கும் உள்ள தொடர்பை நிரூபிப்பதற்குபோதுமான ஆதாரங்கள் எங்களுக்குக் கிடைத்தன. இதைக் கண்டு நாங்கள் அதிர்ச்சிஅடைந்தோம். கிரிக்கெட் சூதாட்டத்தில் இந்த தாதாக்கள் பெரும் பங்கு வகிக்கின்றனர்.
இதைப் பார்த்துக் கொண்டு நாங்கள் அமைதியாக இருக்க முடியாது. எனவேதான்இந்தப் புதிய விசாரணையை துவங்கியுள்ளோம்.
சூதாட்டத்தின்போது பரிமாறப்பட்ட வெளிநாட்டுப் பணம், தாதாக்களுக்கும்,கிரிக்கெட் வீரர்களுக்கும் இடையிலான உறவு, சட்டவிரோதமான பணப் பரிவர்த்தனைஉள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து விசாரிக்கப்படும் என்றார் சவானி.
மேட்ச் பிக்ஸிங் தொடர்பாக சவானி கொடுத்த அறிக்கையில், சில கிரிக்கெட்வீரர்களுக்கு தாதாக்களுடன் தொடர்பு இருப்பதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
சவானி தொடர்ந்து கூறுகையில், சி.பி.ஐ. விசாரணையின்போது, மும்பைகுண்டுவெடிப்புச் சம்பவங்களில் தொடர்புடைய "தாதா தாவூத் இப்ராகிமின் உறவினர்அனீஸ் இப்ராகிமுக்காக சில போட்டிகளில் முன்னாள் கேப்டன் அசாருதீன் கலந்துகொண்டதாக, முன்னாள் டாக்டர் அலி இராணி தெரிவித்திருந்தார். ஆயினும், இதைஅப்படியே ஏற்றுக் கொள்ள முடியாது. இந்தப் புகார் நிரூபிக்கப்பட வேண்டும்.இதையும் விசாரித்து வருகிறோம்.
விசாரணைக்காக சி.பி.ஐ. அதிகாரிகள் வெளிநாடுகளுக்கும் அனுப்பப்படுவார்கள்.விசாரணைக்கான காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை என்றார் அவர்.
மேட்ச் பிக்ஸிங் தொடர்பாக சி.பி.ஐ. நடத்திய விசாரணையில், போட்டிகளின்முடிவுகளை நிர்ணயிப்பதில் அசாருதீன் பெருமளவில் ஊழலில் ஈடுபட்டது தெரியவந்தது. அவருடன் சேர்த்து அஜய் ஜடேஜா, மனோஜ் பிரபாகர், அஜய் சர்மாஆகியோருடைய தவறுகளும் நிரூபிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications