திமுக கூட்டணியில் குழப்பமில்லை.. வைகோ
கன்னியாகுமரி :
திமுக கூட்டணியில் எந்த முரண்பாடும் இல்லை என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
வைகோ, வெள்ளிக்கிழமை மாலை கன்னியாகுமரிக்கு வந்தார். அரசு விருந்தினர் மாளிகையில் அவர்நிருபர்களிடம் கூறியதாவது:
கன்னியாகுமரி பேரூராட்சியின் 15-வது வார்டு ம.தி.மு.க. கவுன்சிலர் ராமசாமி கொலை செய்யப்பட்ட தகவல்கேட்டு அதிர்ச்சியடைந்தேன். அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறி கண்ணீரில் பங்கேற்பதற்காக வந்திருக்கிறேன்.
கடந்த ஜனவரி 1-ந்தேதி வள்ளுவர் சிலை திறப்பின் போது அவர் என்னிடம் பொது மக்கள் பிரச்சினை தொடர்பாகபல்வேறு கோரிக்கைகளை கூறினார். அவரது மறைவு கட்சிக்கும், பொதுமக்களுக்கும் பெரும் இழப்பு.கொலையாளிகள் மீது போலீசார் தக்க நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறேன்.
ராஜ்குமார் விடுதலையால் தமிழகம்-கர்நாடக மக்களிடையே சுமுக இணக்கம் ஏற்பட்டுள்ளது. ராஜ்குமார் விடுதலைகுறித்து மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். இதற்காக தமிழக அரசுக்கும், விடுதலைக்கு பாடுபட்ட நக்கீரன் கோபால்,பழ. நெடுமாறன் மற்றும் குழுவினர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
ம.தி.மு.க.வின் தேர்தல் கூட்டணியில் எந்த மாற்றமும் இல்லை. டாக்டர் ராமதாஸும் இந்தக் கூட்டணியிலிருந்துமாறுவார் என நான் நினைக்கவில்லை. ஜெயலலிதா தண்டனை பெற்றுள்ளதால் வருகிற தேர்தலில் அவர் நிற்கமுடியாது என்று நான் கருதுகிறேன்.
கடந்த பாராளுமன்றத் தேர்தலின் போது ஒவ்வொரு வேட்பாளரிடம் சிறைத்தண்டனை பெற்றவரா? எத்தனைஆண்டு சிறைத் தண்டனை பெற்றவர்? என்று உறுதிமொழி வாங்கிய பிறகே தேர்தலில் போட்டியிடஅனுமதிக்கப்பட்டது. அதே விதி முறை இப்போதும் கையாளப்படுவது உறுதி.
தி.மு.க. கூட்டணியில் நாங்கள் நிரந்தரமாக இருப்போம். அதில் எந்த முரண்பாடும் இல்லை. தமிழகத்தில் 3வதுஅணி அமைந்தாலும் எங்கள் கூட்டணிக்கு பாதிப்பு இருக்காது. வருகிற தேர்தலில் தி.மு.க. தனித்து ஆட்சிஅமைக்கும் வகையில் மெஜாரிட்டி பெறும் என்று நான் கருதுகிறேன் என்றார் வைகோ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications