நாகர்கோவில்: வேன் பள்ளத்தில் விழுந்ததில் 5 பேர் பலி
நாகர்கோவில்:
தமிழகத்தில் நாகர்கோவில் மாவட்டம் பாலாமோர் அருகேயுள்ள 120 அடி ஆழமுள்ள பள்ளத்தில் வேன் சரிந்துவிழுந்ததில் அதில் பயணம் செய்த 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 17 பேர் காயமடைந்தனர்.
இச்சம்பவம் ஞாயிற்றுக்கிழமை காலை நடந்தது. இறந்தவர்களில் 4 பேர் பெண்கள். ஒரு குழந்தை எனத் தெரியவந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் பிலாத்திகுளத்தைச் சேர்ந்த சிலர் பாலமோர் எஸ்டேட்டில் வேலை செய்யும் தங்களதுஉறவினர்களைப் பார்க்க வந்த போது இந்த விபத்து நடந்தது.
விபத்தில் உயிரிழந்தவர்களில் 3 பெண்கள் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள். ஒருவர் பெயர் பாப்பா. வயது 35.விபத்தில் இறந்த குழந்தை பெயர் கணேசன். வயது ஒன்றரை. விபத்தில் காயமடைந்தவர்கள் அனைவரும்மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
வேனை ஓட்டி வந்த டிரைவர், காயமின்றி உயிர்தப்பி விட்டதாகப் போலீஸார் தெரிவித்தனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications