அரசு ஊழியருக்கு பளார் கொடுத்த பா.ம.கவினர்
கோவை:
அரசு விருந்தினர் மாளிகையான சர்க்யூட் ஹவுசில் இடம் ஒதுக்கீடு செய்யப்படாததால் ஆத்திரமடைந்த பா.ம.க வினர், விருந்தினர்மாளிகையில் பணிபுரியும் ஊழியருக்கு "பாளர் அறை விட்டனர்.
மேலும் சர்க்யூட் ஹவுசில் அறை ஒதுக்கப்படாததைக் கண்டித்து உண்ணாவிரதம் மேற்கொள்ளவும் பா.ம.கவினர்திட்டமிட்டுள்ளனர்.
கோவையில் பாட்டாளி மக்கள் கட்சியின் 200வது மாநில மாநாடு மற்றும் பொதுக் குழுக் கூட்டம் நடந்தது. இதையொட்டி 4எம்.பி.,க்கள், 5 எம்.எல்.ஏ.,க்கள் ஆகியோருக்கு 9 அறைகள் ஒதுக்குமாறு அதிகாரிகளிடம் கோவை மாநாட்டுப் பொறுப்பாளரும்பாட்டாளி மக்கள் கட்சியின் செயலருமான முருகவேல் விண்ணப்பம் கொடுத்திருந்தார்.
சர்க்யூட் ஹவுசில் ஏற்கனவே அப்துல் லத்தீப், மற்றும் இரண்டு எம்.எல்.ஏக்கள் தங்கியிருந்ததால் பாட்டாளி மக்கள் கட்சியினருக்குஒதுக்க அறைகள் இல்லை. இதனால் அறைகள் ஒதுக்கப்படவில்லை.
மாநாட்டிற்கு வருகை தந்த மாநிலத் தலைவர் மணி, விருந்தினர் மாளிகையின் டெலிபோன் ஆபரேட்டரிடம் "எங்களுக்கு எந்தஅறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனக் கேட்டுள்ளனர். மேலதிகாரியிடம் கேட்டுச் சொல்வதாகக் கூறிய அவர், அதிகாரியைபோனில் தொடர்பு கொள்ள முயன்றார்.
ஆனால், போன் தொடர்பு கிடைக்கததால் வெகுநேரம் பதில் கிடைக்கவில்லை. பின்னர், போதுமான அறைகள் இல்லாததால்இடம் ஒதுக்கீடு செய்ய முடியவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து பாட்டாளி மக்கள் கட்சியின் எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் கோவையில் வி.வி.ஐ.பி.,க்கள் தங்கும்ஹோட்டல் ரெசிடென்சியில் சென்று தங்கினர். இதனால் ஆத்திரமடைந்த பாட்டளி மக்கள் கட்சியைச் சேர்ந்த சில பிரமுகர்கள்டெலிபோன் ஆபரேட்டரை கன்னத்தில் அறைந்தனர். இதனால் சர்க்யூட் ஹவுசில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த தாக்குதல் தொடர்பாக போலீசில் எவ்விதப் புகாரும் அளிக்கப்படவில்லை என போலீசார் தெரிவித்தனர்.
இந் நிலையில் சர்க்யூட் ஹவுசில் இடம் ஒதுக்கப்படாததைக் கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சி உண்ணாவிரதம்இருக்கப்போவதாக அறிவித்துள்ளனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications