மகளிர் இடஒதுக்கீடு: பா.ம.க. ஆதரவு
கோவை:
நாடாளுமன்றத்தின் நடப்புக் கூட்டத் தொடரிலேயே மகளிருக்கான இட ஒதுக்கீட்டு மசோதனை நிறைவேற்ற வேண்டும் என பாட்டாளி மக்கள்கட்சியின் மாநில பொதுக் குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
கோவையில் பாட்டாளி மக்கள் கட்சியின் 200 வது தொகுதி மாநாடு மற்றும் மாநிலப் பொதுக் குழுக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில்நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
பாராளுமன்றத்தில் மகளிருக்கான இட ஒதுக்கீட்டு மசோதாவினை நடப்பு குளிர்காலக் கூட்டத் தொடரிலேயே நிறைவேற்ற வேண்டும்.
அரசுடமையாக்கப்பட்ட வங்கிகளை தனியார்மயமாக்கக் கூடாது. இந்த வங்கியின் செயல்பாடுகளை செம்மைப்படுத்தி, மக்களுக்குச் சிறந்த முறையில்சேவை செய்யும் வகையில், தற்போதுள்ள நிலையே நீடிக்கச் செய்ய வேண்டும்.
பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில மாநாட்டை திருச்சியில் நடத்த திட்டமிட்டுள்ளோம். இந்த மாநாட்டிற்கு மாநிலத் தலைவர் ஜி.கே மணி தலைமையில்மாநாட்டு வரவேற்புக் குழு அமைப்பதென முடிவு செய்யப்பட்டுள்ளது.
பா.ம.கா வின் உறுப்பினர் சேர்க்கை டிசம்பர் 10ம் தேதிக்குள்ளும், அமைப்புத் தேர்தலை டிசம்பர் 31ம் தேதிக்குள்ளும் முடிக்க வேண்டும்.
நிதி நீர்ப் பங்கீட்டில் தமிழகம் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருகிறது. காவிரி கர்நாடகத்தாலும், முல்லைப் பெரியார் அணையால் கேரளாவும் தமிழகத்திற்குதண்ணீர் தர மறுத்து வருகிறது. இதற்கு நிரந்தர தீர்வு காணவும் பேபி அணையினைப் பார்வையிடவும், மத்திய அரசுத் மண்வள ஆய்வுக் குழு தமிழகம்வருகிறது. இதற்குத் தேவையான முன்னேற்பாடுகளைக் கவனிக்கச் சென்ற தமிழகப் பொதுப்பணித் துறை இன்ஜினியர்கள் மற்றும் ஊழியர்கள்தாக்கப்பட்டுள்ளனர். இதனை பாட்டாளி மக்கள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
பா.ம.க நிறுவனர் ராமதாஸ் மீது நடத்தப்பட்ட வன்முறைத் தாக்குதலைக் கண்டித்து அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை குண்டர் சட்டத்திலும்,தேசியப் பாதுகாப்புச் சட்டத்திலும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இப்படி அப்பாவிகள் மீது பொய் வழக்குப் போட்டுள்ள அதிகாரிகளை பொதுக் குழு வன்மையாகக் கண்டிக்கிறது. இவர்களை எவ்வித நிபந்தனையும்இன்றி விடுதலை செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறது .
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications