இலங்கையில் கடும் மழைக்கு வீடிழந்த 10,000 குடும்பங்கள்
கொழும்பு:
இலங்கையின் கிழக்குப் பகுதியில் பெய்துவரும் கடும் மழையால் 10,000குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுமண்டலத்தால்இலங்கையின் பல பகுதிகளிலும் கடும் மழை பெய்து வருகிறது.
இந்த மழையின் காரணமாக இலங்கையின் கிழக்குப் பகுதி மிகவும்பாதிக்கப்பட்டுள்ளது. 10,000 குடும்பங்கள் வீடிழந்து தவிக்கின்றன. பல ஏக்கர்நிலங்களில் உள்ள பயிர்கள் மழை நீரில் மூழ்கி நாசமாகி விட்டன.
இதுபற்றி அரசு அதிகாரிகள் தெரிவிக்கையில், கடந்த இரண்டு நாட்களாக பெய்துவரும் மழையால் அம்பாரை, மட்டக்களப்பு மற்றும் பொலனருவா மாவட்டங்கள்தான்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கல்முனையையும், பொல்லுவில்லையும்இணைக்கும் நெடுஞ்சாலை முழுவதும் மழைநீரில் மூழ்கி உள்ளது.
மட்டக்களப்பில் மட்டும் 5000 குடும்பங்கள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.பாதிக்கப்பட்ட அனைவரையும் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லும்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 25,000 மக்கள் பள்ளிகளிலும், பொதுகட்டடங்களிலும் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள் என கூறினர்.
யு.என்.ஐ.
-
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
வெளுத்து வாங்கப் போகும் கனமழை! இரவோடு இரவாக 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! வானிலை மையம் எச்சரிக்கை -
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications