வெளிநாட்டு கட்டுரையை காப்பி அடித்த பேராசிரியர்
சென்னை:
வெளிநாட்டை சேர்ந்தவருடைய கட்டுரையை காப்பியடித்து எழுதிய மதுரைபல்கலைக்கழக பேராசிரியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஆயிரம் ரூபாய் அபராதம்விதித்துள்ளது.
கடந்த 1976ம் ஆண்டு மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பி.ராமமூர்த்தி என்பவர்விரிவுரையாளராக சேர்ந்தார். 1985ம் ஆண்டு இவர் ரீடராக பதவி உயர்வு பெற்றார்.
அலிகாரிலிருந்து வெளிவரும் ஆய்வு தொடர்பான பத்திரிகையில் ஷேக்ஸ்பியர் பற்றி1987ம் ஆண்டு இவர் கட்டுரை ஒன்றை வெளியிட்டார்.
இதை அறிந்த அகில இந்திய பல்கலைக்கழக சங்கம், மதுரை காமராஜர்பல்கலைக்கழகத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியது. அதில் கனடா நாட்டைச் சேர்ந்தபேராசிரியர் டபிள்யூ.பி.தார்ன் எழுதிய கட்டுரையை அப்படியே காப்பியடித்துராமமூர்த்தி எழுதியுள்ளதாக குறிப்பிடப்பட்டது.
இதுபற்றி பல்கலைக்கழக சிண்டிகேட் விசாரித்தது. இதையடுத்து 6 ஆண்டுகள்விரிவுரையாளராக பதவியிறக்கம் செய்து பல்கலைக்கழகம் உத்தரவிட்டது. இதைஎதிர்த்து ராமமூர்த்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இவ்வழக்கை தள்ளுபடி செய்த நீதிபதி சதாசிவம் தனது தீர்ப்பில், ராமமூர்த்தியின்இத்தகைய செயலால் சர்வதேச அளவில் பல்கலைக்கழகத்திற்கும், நாட்டிற்கும் கெட்டபெயர் ஏற்பட்டுள்ளது.
இதுபோன்ற நபர்களுக்கு கருணை காட்டினால் சர்வ தேச அளவில் நமது நாட்டிற்குகெட்ட பெயர் ஏற்பட்டு விடும். எனவே இவரை பதவியிறக்கம் செய்து சிண்டிகேட்பிறப்பித்த உத்தரவு செல்லும். வழக்கு செலவான ரூ. 1000த்தை மதுரைபல்கலைக்கழகத்திற்கு ராமமூர்த்தி செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications