ஜனநாயக ரீதியில் தமிழ் தேசத்தை ஆதரிக்கலாம்.. கருணாநிதி
சென்னை:
வீரப்பன் தமிழ் தேசம் அடைந்தே தீருவேன் என அறிக்கை கொடுத்திருப்பது அவரதுகருத்து. அவை கட்டுக்குள் இருக்கும்வரை. ஜனநாயக முறைப்படி நடக்கும் வரைஅதை அரசு அனுமதிக்கலாம் என்று தமிழக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
சென்னையில் அவர் அளித்த பேட்டியில், ராஜ்குமார் விடுதலையில், விடுதலைப்புலிகள் சம்பந்தப்பட அரசு அனுமதிக்கவில்லை. விடுதலைப் புலிகள் மீதான தடையைநீக்க வேண்டும் என வைகோ கூறியிருப்பது அவரின் சொந்தக் கருத்து.
பத்மாநாபா படுகொலைக்கு பிறகும், ராஜீவ் காந்தி படுகொலைக்குப் பிறகும்விடுதலைப் புலிகள் மீது எங்களுக்கு இருந்த அனுதாபத்தை நாங்கள் விலக்கிக்கொண்டு விட்டோம். அதே சமயத்தில் இலங்கை தமிழர் கஷ்டங்களுக்காக நாங்கள்அனுதாபப்படுவது தொடரும்.
எல்லோராலும் ஒப்புக் கொள்ளக் கூடிய கோரிக்கையாக இருந்தால் கூடதீவிரவாதத்திற்கு இடம் கொடுக்க முடியாது.
வீரப்பன் சந்தனமரம் கடத்த்தியதும், யானைகளை கொன்றதும் ஒரு தனி மனிதனால்முடிகிற காரியமில்லை. இதற்கு அரசியல் பின்னணியும், அதிகாரிகள் ஆதரவும்இருக்கிறது என நெடுமாறன் கூறியிருக்கிறார்.
யானைகளைக் கொன்றது,. 100-க்கும் மேற்பட்ட மனிதர்களைக் கொன்றது எல்லாம்ஒரே நாளில் நடைபெற்றதல்ல. பல ஆண்டுகளாக நடந்தவை.
இந்த விஷயம் குறித்து நான் சட்டசபையிலும் பேசி இருக்கிறேன். இந்த விஷயத்தியின்பின்னணியில் எந்த கட்சியோ அல்லது எந்த அதிகாரியோ ஈடுபட்டிருந்தால் உரியநடவடிக்கை எடுக்கப்படும்.
வீரப்பன் தமிழ் தேசம் அடைந்தே தீருவேன் என அறிக்கை கொடுத்திருப்பது அவரதுகருத்து. அவை கட்டுக்குள் இருக்கும்வரை. ஜனநாயக முறைப்படி நடக்கும் வரைஅதை அரசு அனுமதிக்கலாம். ஆனால் கட்டுக்கு மீறி போகும் போது அரசு அது குறித்துகவனிக்கும்.
வன்மூறை மூலம் அந்த கருத்து வருமானால் அரசு அதை அனுமதிக்காது. விடுதலைப்புலிகளின் நடவடிக்கையாக இருந்தாலும். தமிழ், தமிழர் என்ற பெயரில் தீவிரவாதநடவடிக்கையில் எவர் ஈடுபட்டாலும் அதை அரசு அனுமதிக்காது என முதல்வர்கூறினார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications