வீரப்பனை உயிருடன் பிடிக்க வேண்டும்
ஈரோடு:
வீரப்பனை உயிருடன் பிடிக்க வேண்டும் என வீரப்பனின் சொந்தக் கிராமத்து மக்கள்விருப்பம் தெரிவித்துள்ளனர்.
வீரப்பனைப் பிடிக்க, அதிரடிப்படை காட்டுக்குள் நுழைந்துள்ளது. இந்த முறைஎப்படியாவது பிடித்தே ஆக வேண்டும் என்ற நிலையை இரு மாநில அரசுகளும்மேற்கொண்டுள்ளன.
இந்நிலையில், வீரப்பனை உயிருடன் பிடிக்க வேண்டும். அப்போது தான் பல முக்கியபுள்ளிகளின் ரகசியங்கள் வெளியாகும் என வீரப்பனின் சொந்த கிராமமானகோபிநத்தம் கிராம மக்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இந்த கிராமத்தைச் சேர்ந்த குழந்தைப்பையன் என்பவர் கூறும்போது, "வீரப்பன் மிகவும்நல்லவன். வீரப்பனை உயிருடன் தான் பிடிக்க வேண்டும். அப்போதுதான் வீரப்பனின்பெயரைச் சொல்லி பல குற்றங்களில் ஈடுபட்டவர்களின் நிலை தெரிய வரும்.
கன்னட நடிகர் ராஜ்குமாரைக் கடத்தியது தவறு தான். அதேசமயம் ராஜ்குமாரைவீரப்பன் துன்புறுத்தாமல் நன்றாக கவனித்துக் கொண்டான். விடுதலையும் செய்துவிட்டான் என்றார்.
இதே ஊரைச் சேர்ந்த நாகேஷ் என்பவர் கூறுகையில், வீரப்பனின் பிரச்னையால் தான்எனது தந்தை இறந்து போனார். வீரப்பன் தான் எனது தந்தையைக் கொன்றாரா?அல்லது வேறு யாராவது கொலை செய்து விட்டு வீரப்பன் மீது பழி போட்டு வி ட்டுவிட்டனரா என்பது தெரியவில்லை. எனவே, வீரப்பனை உயிருடன் மீட்டால் தான்உண்மை தெரிய வரும். வீரப்பனைக் கொல்லாமல் உயிருடன் பிடிக்க வேண்டும்என்றார்.
இந்நிலையில் வீரப்பனைத் தேடி புகுந்துள்ள அதிரடிப்படையினர், இரவு நேரங்களில்கண்காணிப்பைப் பலப்படுத்த திட்டமிட்டுள்ளார். இரவு நேரத்தில் கண்காணிக்கப்பயன்படும் சக்தி வாய்ந்த பைனாகுலர்கள் இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
திம்பம், பண்ணாரி, பவானி சாகர், பந்திப்பூர், தலைமலை, புளிஞ்சூர் ஆகியபகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.மேலும் இப்பகுதியில் சென்று வரும் வாகனங்கள் தீவிர சோதனை செய்யப்பட்டுவருகிறது.












Click it and Unblock the Notifications