திருச்சி பெண் சாமியார் ஐகோர்ட்டில் அப்பீல்
சென்னை:
திருச்சி, கே.கே.நகர் பகுதியிலுள்ள ஆசிரமத்தில் ஆசிரியை லீலாவதி கொலை செய்யப்பட்ட வழக்கில், தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஆயுள் தண்டனையை ரத்துசெய்யக் கோரி பெண் சாமியார் ஜெயந்தி மாதா உள்பட 5 பேர் சென்னை ஐகோர்ட்டில் அப்பீல் செய்துள்ளனர்.
கே.கே.நகர். கிம்பர் கார்டன் பகுதியில் ஸ்ரீதேவி ஆசிரமம் என்ற பெயரில் பெண் சாமியார் ஜெயந்தி ஆசிரமம் நடத்தி வந்தார். சிறுவயதில் இறந்து போனதனது மகள் ஸ்ரீதேவியின் நினைவாக அவர் இந்த ஆசிரமத்தை நடத்தி வந்தார். திருச்சி அருகே ஓலையூர் கிராமத்தில் ஸ்ரீதேவிக்கு கோவிலும் கட்டி பூஜைகள்நடத்தி வந்தார்.
பெண் சாமியார் ஜெயந்தி, கணவனைப் பிரிந்து வாழ்ந்து வந்தார். இதே போல் மனைவியைப் பிரிந்த ஸ்ரீபுத்திரா என்பவர் அந்த ஆசிரமத்தில் தங்கியிருந்துநிர்வாகியாகப் பணிபுரிந்து வந்தார்.
ஜெயந்தியின் மகள் ஸ்ரீதேவி உயிருடன் இருந்த போது, அவருக்கு ஆசிரியராக இருந்த லீலாவதி, ஸ்ரீதேவி இறந்த பின் ஆசிரமத்தில் கணக்கராக இருந்து கணக்கு,வழக்குகளைக் கவனித்து வந்தார்.
இதற்கிடையே, கடந்த ஏப்ரல் மாதம் 8 ம் தேதி ஆசிரியர் லீலாவதி மர்மமான முறையில் கொல்லப்பட்டார். யாருக்கும் தெரியாத வகையில் அவரதுபிணம் எரிக்கப்பட்டது. இதையடுத்துப் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. தனிப்போலீஸ் படை அமைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டது.
அப்போது, பெண் சாமியார் ஜெயந்திக்கும், ஸ்ரீபுத்திராவுக்கும் கள்ளத் தொடர்பு இருந்ததாகவும், ஆசிரமச் சொத்துக்களைத் தனக்குத் தராவிட்டால் வெளியில்இதை அம்பலப் படுத்துவேன் என்று லீலாவதி மிரட்டல் விடுத்ததால் அவரைக் கொலை செய்ததாகவும் விசாரணையில் தெரிய வந்தது.
இது தொடர்பாக ஜெயந்தி உள்பட 12 பேரைப் போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கு கடந்த 14 ம் தேதி விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்தநீதிபதி முனிரத்தினம் வழக்கில் தொடர்புடைய பெண் சாமியார் ஜெயந்தி, ஆசிரம நிர்வாகி ஸ்ரீபுத்திரா, ஸ்ரீபுத்திராவின் மகன் சத்யநாராயணா ஸ்ரீபுத்திரா, பெண் சாமியார்மகன் சத்யநாராயணா, என்ஜினியர் தினகரன் ஆகிய 5 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
ஆசிரமக் காவலாளி கருப்பைய்யாவுக்கு 4 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், ரூ 6 ஆயிரம் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தார்.
தங்களுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்து செய்யக் கோரி பெண் சாமியார் ஜெயந்தி உள்பட 5 பேரும் சென்னை ஐகோர்ட்டில் அப்பீல் செய்துள்ளனர்.இதேபோல் 4 ஆண்டுகள் ஜெயில் தண்டனை பெற்ற காவலாளி கருப்பையாவும் அப்பீல் செய்துள்ளார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications