தேர்தல் கூட்டணி குறித்து சோனியாவுடன், ஜெ.பேச்சு
சென்னை:
அதிமுக பொதுச்செயலாள் ஜெயலலிதா, தேர்தல் கூட்டணி குறித்து காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டுபேசினார்.
தமிழகத்தில் ஏப்ரல் மாதம் தேர்தல் நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் கமிஷனர் கில் சமீபத்தில் அறிவித்திருந்தார்.
இதையடுத்து, அனைத்து அரசியல் கட்சிகளும் சட்டமன்றத் தேர்தலை சந்திக்க தங்கள் கட்சியினரை தயார்படுத்தி வருகின்றன.
தமிழக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன், அதிமுக கூட்டணி சேரலாம் என்று தெரிகிறது. அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா தேர்தல்கூட்டணி குறித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாவுடன் புதன்கிழமை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாக காங்கிரஸ்வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் இளங்கோவனை மாற்றி விட்டு புதிய தலைவரை நியமிக்க வேண்டும் என்று கோரி முன்னாள் தமிழககாங்கிரஸ் தலைவர் தங்கபாலு தலைமையில் 70 க்கும் மேற்பட்ட காங்கிரசார் டெல்லி சென்றுள்ளனர்.
இவர்கள் சோனியாவை சந்தித்து தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவனை நீக்கி விட்டு வேறு புதிய தலைவரை நியமிக்குமாறு கேட்டுக்கொள்வார்கள் என்று தெரிகிறது.
தமிழகத்தைச் சேர்ந்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் பதவிக்கு புதிதாக 71 பேரின் பெயர்கள் அறிவிக்கப்பட உள்ளன. மாவட்டத்தலைவர்கள் பெயரும் விரைவில் அறிவிக்கப்படலாம் என்று தெரிகிறது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications