ஈரான்-இந்தியா இடையே கடலுக்கடியில் காஸ் குழாய் இணைப்பு
டெல்லி:
ஈரானிலிருந்து இந்தியாவுக்கு இயற்கை வாயுவை ( எரிவாயு) குழாய் மூலம் கொண்டுவரும் முயற்சியில் புதிய யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலில் ஈரானிலிருந்து பாகிஸ்தான் வழியாக இந்தியாவுக்கு குழாய் அமைக்கலாம்என ஈரான் கூறிவந்தது. ஆனால், பாகிஸ்தான் வழியாக குழாய் அமைக்க இந்தியாவிரும்பவில்லை.
இதையடுத்து இந்தியாவுக்கு பாகிஸ்தான் வழியாக தரைவழி குழாய் அமைக்கும் முயற்சியை கைவிட்டுவிட்டுகடலுக்கு அடியில் குழாய் அமைத்து அதன் மூலம் இயற்கை வாயுவை அனுப்புவதுஎன ஈரான் திட்டமிட்டுள்ளது.
இத் திட்டம் சாத்தியமா என இந்தியாவும் ஈரானும் ஆராய உள்ளன. இது குறித்து இருநாட்டு அதிகாரிகள் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.
இந்த கூட்ட விவரம் குறித்து வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர்தெரிவிக்கையில் ,
கூட்டத்திற்கு இந்தியாவின் சார்பில் வெளியுறவுத்துறை (கிழக்கு) செயலாளர் ராஜன்தலைமை தாங்கினார். ஈரான் சார்பில் துணை வெளியுறவுத்துறை அமைச்சர் அடேலிதலைமை தாங்கினார். இந்த திட்டம் குறித்து இரண்டாவது கட்ட கூட்டம் அடுத்தஆண்டு நடக்கும்.
இந்தக் கூட்டத்தில் கடலின் கீழ் குழாய் அமைப்பது குறித்து ஆய்வு செய்ய ஆலோசகர்ஒருவரை நியமிப்பது எனவும், எந்த விதமாக குழாய் அமைப்பது என்பது குறித்தும்ஆலோசனை செய்யப்பட்டது.
இதற்கு ஆகும் செலவை இரு நாடுகளும் பகிரந்து கொள்ளும். இந்த திட்டத்தைசெயல்படுத்த 9 மாதம் முதல் 12 மாத கால அவகாசம் தேவைப்படும். இந்தத்திட்டத்தில் இரு நாடுகளும் பொருளாதார, தொழில்நுட்ப மற்றும் பாதுகாப்புசம்பந்தமான அனைத்து விஷயங்களையும் கவனத்தில் கொள்ளவும் ஒப்புக்கொண்டுள்ளன என்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
39 முறை பொய் சொன்ன Trump.. முழுக்க முழுக்க மார்க்கெட் மேனிபுலேஷன்? ஈரான் கொடுத்த பதிலடி! -
விடியல் பிறக்கிறது.. ஈரான் போர் முடிவு.. டிரம்ப் உடன் ராசியான முஜ்தபா கமேனி.. இவரே சொல்லிட்டாரா? -
14 பாயின்ட்.. மொத்த போரும் முடிவுக்கு வந்தது.. கதவை திறங்க, கப்பல் கிளம்பட்டும்! -
கதையை முடிக்க அமெரிக்கா போடும் பிளான்.. கறார் காட்டும் ஈரான்! டிரம்புக்கு செக்! -
ஹார்முஸில் கப்பல் போக ஆரம்பித்த அடுத்த நொடி.. ஈரான் கைகளுக்கு வரும் பல கோடி டாலர்! எப்படி? -
100 நாட்களை தாண்டிய அமெரிக்கா இஸ்ரேல் தாக்குதல்.. ஈரானை இன்னும் வீழ்த்த முடியாத ரகசியம் என்ன? -
யுரேனியத்தை பதுக்கும் ஈரான்.. அமெரிக்கா தொட கூட முடியாது! டிரம்புக்கு செக்! -
ஈரான் - அமெரிக்கா போர் முடிவுக்கு வருகிறது? 24 மணி நேரத்தில்.. பாகிஸ்தான் பிரதமர் முக்கிய அறிவிப்பு -
நான் வந்துட்டேன்னு சொல்லு.. தலைநிமிர்ந்த தங்கம்! ஒரே அறிவிப்பால் திடுக்குனு உயர்ந்த விலை! என்னாச்சு? -
பஞ்சாயத்து ஓவர்.. அமெரிக்கா-ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம்! டிரம்ப் சொன்ன குட் நியூஸ் -
குட்டையை குழப்பிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் சொதப்பல்! போர் இப்போதைக்கு முடியாது! -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு












Click it and Unblock the Notifications