வீரப்பன் பிரச்சனை: கருணாநிதி-ஜெ. மோதல் தொடர்கிறது
சென்னை:
கற்பனையாகச் செய்திகளை வெளியிடாமல் சிலர் சுயக் கட்டுப்பாடு விதித்துக் கொண்டால் வீரப்பன் தேடுதல் வேட்டையில் வெற்றி கிட்டும் என்று தமிழகமுதல்வர் கருணாநிதி கூறினர்.
இதுகுறித்து முதல்வர் கருணாநிதி அளித்துள்ள பேட்டி:
கேள்வி: ராஜ்குமார் மீட்பு குறித்து சி.பி.ஐ. விசாரணை வேண்டுமென்று ஜெயலலிதா கேட்டுள்ளாரே?
பதில்: சி.பி.ஐ. என்றால் வானத்திலிருந்து குதித்தவர்களா என்று ஆட்சியிலிருந்தபோது ஜெயலலிதா கேட்டார். இப்போது அவரே தான் சி.பி.ஐ. விசாரணைவேண்டுமென்கிறார். அவர் மீது நடைபெறுகிற சி.பி.ஐ. விசாரணைகள் முதலில் முடியட்டும்.
கேள்வி: ராஜ்குமார் கடத்தல் விவகாரம் தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் ஜெயலலிதா கேட்டுள்ளாரே?
பதில்: ஜெயலலிதா ஆட்சியிலிருந்த போது வீரப்பனால் நான்கு முறை கடத்தல் நடைபெற்றதே, அதில் எத்தனை சம்பவங்களுக்கு அவர் வெள்ளை அறிக்கைவைத்தார் என்ற ஒரு கேள்வியை மட்டும் அவரிடம் கேளுங்கள்.
கேள்வி: தூதுக் குழுவில் இடம் பெற்ற கொளத்தூர் மணியை கட்சியை விட்டு நீக்கியதில் இருந்து தி.க. தலைவர் வீரமணி விடுதலைப்புலி ஆதரவாளர்அல்ல என்பதை தெரிந்து கொள்ளலாம் என்று த.மா.கா. நிர்வாகி எஸ்.ஆர். பாலசுப்ரமணியம் கூறியுள்ளாரே?
பதில்: பிரபாகரன் தமிழ் சமுதாயத் தலைவர் மட்டுமல்ல; என்னுடைய இளைய சகோதரன் என்று பேசியவர் வீரமணி. அவரை புலி ஆதரவாளர் அல்ல என்றுஎஸ்.ஆர்.பி. கூறியது விந்தை தான். மேலும் கொளத்தூர் மணியை விடுதலைப் புலிகளின் ஆதரவாளர் என்பதற்காக கட்சியிலிருந்து நீக்கவில்லை.
நடிகர் ராஜ்குமார் விடுவிக்கப்படமாட்டார், அதை வைத்தே தேர்தல் வரை பிரச்சாரம் செய்யலாம் என்ற நம்பிக்கையில் இருந்த ஜெயலலிதாவின் எண்ணத்தைக்குலைக்கும் வகையில் ராஜ்குமார் விடுவிப்பதற்கு கொளத்தூர் மணியும் காரணமாக இருந்து விட்டார்.
அவர் தன் கட்சியை சேர்ந்தவர் என்பதால் ஜெயலலிதாவின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்பது தான் உண்மையில் கொளத்தூர் மணியை வீரமணி கட்சியிலிருந்துநீக்கியதற்கு காரணம். அதை சரியாகத் தெரிந்து கொள்ளாமல் எஸ்.ஆர்.பி. இப்படி கூறியிருக்கிறார்.
கேள்வி: தேசிய மனித உரிமைக் கமிஷன் அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக திகழ்வதாக குறிப்பிட்டிருப்பது பற்றி?
பதில்: தமிழகத்தில் நடைபெறும் திமுக ஆட்சிக்கு தேசிய மனித உரிமைக் கமிஷன் வழங்கிய நற்சான்றிதழ் அது என்றார் முதல்வர் கருணாநிதி.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications