தொடர் மழையால் நீலகிரியில் நிலச்சரிவு
உதகமண்டலம்:
-நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால், பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதிலும் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளது. பருவ மழையால் நீலகிரியில் அனைத்து பகுதிகளிலும் பலத்த மழை பெய்து வருகிறது.
இதனால் நீலகிரி மாவட்டத்தின் பல பகுதிகள் பாதிப்படைந்துள்ளன. தாழ்வான பகுதிகளிலுள்ள வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. பெரும் சேதம்ஏற்பட்டுள்ளது. மரங்களும் சாலையில் விழுந்துள்ளன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
சாலையில் விழுந்த மரங்களை நெடுஞ்சாலைத் துறையினர் அகற்றி வருகின்றனர். புறநகர் பகுதியில் மின் கம்பங்கள் மீது மரங்கள் விழுந்து மின்சார வினியோகம்பாதிக்கப்பட்டுள்ளது.
குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. முன்பு மண் சரிவு ஏற்பட்ட மரப்பாலம்அருகே மீண்டும் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.
வியாழக்கிழமை ஏற்பட்ட மண் சரிவின் காரணமாக 50 அடி தூரத்திற்கு மண் சரிவு ஏற்பட்டுள்ளது. மண் சரிவை அகற்றும் பணி துரிதமாக நடந்துவருகிறது.
மேட்டுப்பாளையம் - நீலகிரி ரயில் பாதையில் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் அந்தப் பகுதியில் ரயில் போக்குவரத்து காலவரையறையின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications