தேனி தனியார் ஆலையில் 2 பெண்கள் மர்மச் சாவு

Subscribe to Oneindia Tamil

தேனி:

தேனியில் தனியார் ஜவுளி மில்லில் வேலை பார்த்து வந்து இரண்டு பெண்கள் வெள்ளிக்கிழமை அதிகாலை மயங்கி விழுந்து இறந்தனர்.

தேனியில் டவல்கள் தயாரிக்கும் தனியார் மில்லில் சர்ஜிகல் டவல் பிரிவில் வேலை பார்த்து வந்தவர் மீனா. வயது 21. இவர் பெரியகுளத்தை அடுத்துள்ளவடகரையைச் சேர்ந்தவர்.

இவருடன் வேலை பார்த்து வருபவர் ப்ரியா. வயது 17. இவர் வடப் புதுப்பட்டியைச் சேர்ந்தவர்.

வியாழக்கிழமை இரவு 88 பெண்கள் இந்த மில்லில் இரவுப் பணியில் ஈடுபட்டிருந்தனர். இவர்களில் மீனாவும், ப்ரியாவும் அடங்குவர். இவர்கள் இருவரும்வெள்ளிக்கிழமை அதிகாலை பாத்ரூம் சென்று விட்டுத் திரும்பினர்.

சிறிது நேரத்தில் மீனா மயங்கி விழுந்தார். பிற ஊழியர்கள் இவரை உடனடியாகத் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு கொடுக்கப்பட்ட சிகிச்சைபலனின்றி மீனா சம்பவ இடத்திலேயே இறந்தார்.

அடுத்த சில நொடிகளில் ப்ரியாவும் மயங்கி விழுந்தார். அவர் தேனி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் இறந்து போனார். இவர்கள்இருவரின் சாவிற்கான காரணம் தெரியவில்லை.

இந்த மர்மச் சாவு அந்தக் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர்களின் சாவு குறித்துப் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+