மைசூரில் தடா கைதிகளுடன் நெடுமாறன் ஆலோசனை

Subscribe to Oneindia Tamil

மைசூர்:

ராஜ்குமாரை மீட்ட தூதுக்குழுத் தலைவரும், தமிழர் தேசிய இயக்கத் தலைவருமான பழ.நெடுமாறன் சனிக்கிழமை மைசூரில் 55 தடா கைதிகளை சந்தித்துப்பேசினார்.

அவருடன் கொளத்தூர் மணி, சுகுமாறன் ஆகியோரும் வந்திருந்தனர். தடா கைதிகளை சந்தித்து விட்டு நிருபர்களிடம் பேசிய நெடுமாறன் கூறியதாவது:

ராஜ்குமாரை விடுவிப்பதற்காக வீரப்பனுக்குக் கோடி கணக்கில் பணம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்று கூறுகிறார்கள். ஆனால் அது வெறும்வதந்தி. அதில் சிறிதளவும் உண்மையில்லை.

ராஜ்குமாரை விடுவிப்பதில், வீரப்பனுடன் எந்த வித பேரமும் நடத்தப்படவில்லை. வீரப்பனுக்கும், விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனுக்கும் இடையேஎந்த விதமான தொடர்பும் கிடையாது.

வீரப்பன் இனிமேல் எங்கு தங்குவார்? எப்படி அடிக்கடி இடத்தை மாற்றிக் கொள்கிறார்? அவரது எதிர்காலத் திட்டம் என்ன என்பது குறித்துஎங்களுக்கு எதுவும் தெரியாது.

கொளத்தூரில் மாநாடு:

கொளத்தூரில் ஞாயிற்றுக்கிழமை தமிழர் அமைப்பினர் மாநாடு நடத்தவுள்ளனர். அதில் தடா கைதிகள் விடுதலை, வீரப்பன் விவகாரம், அதரடிப் படையினர்செய்த மனத உரிமை மீறல்கள் குறித்து விவாதிப்போம். இங்க நிறைவேற்றப்படும் தீர்மானங்களை தமிழக, கர்நாடக அரசுகளிடம் கொடுப்போம்.

இந்த மாநாட்டில் சுகுமாறன், கொளத்தூர் மணி உள்பட பலர் கலந்து கொள்வார்கள். வீரப்பனைப் பிடிப்பதற்காக அதிரடிப் படையினரை அனுப்பியிருப்பதுதவறு என்றார் நெடுமாறன்.

முன்னதாக, மைசூரில் சிறையில் வாடும் 55 தடா கைதிகளை சந்தித்து ஆறுதல் கூறினார் நெடுமாறன்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+