ராஜ்குமாரின் வன வாச அனுபவம் புத்தகமாகிறது
பெங்களூர்:
சந்தன மரக் கடத்தல் வீரப்பனிடம் 108 நாட்கள் பிணைக் கைதியாக இருந்து விடுதலையான கன்னட நடிகர் ராஜ்குமார் தனதுகாட்டு வாழ்க்கை குறித்து புத்தகம் எழுதவிருக்கிறார்.
வீரப்பனிடம் 108 நாட்கள் பிணைக் கைதியாக இருந்து விட்டு விடுதலையான கன்னட நடிகர் ராஜ்குமார் தன் அனுபவம் பற்றியாரிடமும் இதுவரை எதுவும் விவரமாக கூறவில்லை.
இதற்கிடையே, கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தலைவர் சந்திரசேகர் கூறுகையில், அவரது காட்டு அனுபவங்களை அவர்புத்தகமாக எழுதி வெளியிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளோம். அவர் இதை ஏற்றுக் கொள்வார் என நம்புகிறோம்.
1934-ம் ஆண்டு முதல் கன்னட திரைப்படங்கள் தயாரிக்கபட்டு வருகின்றன. ஆனால் கன்னட திரைப்படத்துறை பற்றி இதுவரைஎந்த புத்தகமும் வெளிவரவில்லை. அடுத்த ஆண்டு ஜனவரியில் பெங்களூரில் சர்வதேச திரைப்பட விழா நடக்கும் போது இருதொகுதிகளாக கன்னட திரைப்பட துறை குறித்து புத்தகம் வெளியிடப்படும். இதை வாங்குபவர்களுக்கு ராஜ்குமாரின் வன வாசம்குறித்த புத்தகம் இலவசமாக வழங்கப்படும்
சர்வதேச திரைப்பட விழா நடக்கும் போது இந்த புத்தகம் வெளியிடப்படுவது பொருத்தமாக இருக்கும். இந்த புத்தகங்கள்கன்னடத்திலும் ஆங்கிலத்திலும் வெளியிடப்படும் என்றார்.
ராஜ்குமார் தனது காட்டு வாழ்க்கை அனுபவங்கள் மூலம் சிறந்த திரைக்கதை அமைக்க முடியும் என கூறியிருந்தார். அவர் இதுகுறித்து டிவிக்கு பேட்டியளிப்பது குறித்தும் யோசித்து வருகிறார்.
வீரப்பனை திருத்திய ராஜ்குமார் என்ற பெயரில் 60 பக்கம் கொண்ட புத்தகம் ஏற்கனவே வெளியாகியுள்ளது என்பதுகுறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications