புஷ்ஷா, கோரா: நாளை முடிவு தெரியும்
வாஷிங்டன்:
அமெரிக்க அதிபர் தேர்தலில், புளோரிடா மாநிலத்தில் பதிவான வாக்குகளில் அதிகம் பெற்று, வெற்றி பெற்றவர்யார் என்ற முடிவை திங்கள்கிழமை புளோரிடா தேர்தல் அலுவலகம் அறிவிக்கவுள்ளது.
இதில் வெற்றி பெறுபவரே, அடுத்த அதிபர் என்ற நிலை இருப்பதால், இந்த முடிவு மிகவும் ஆவலுடன்எதிர்பார்க்கப்படுகிறது.
புளோரிடா நேரப்படி ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணிக்கு (இந்திய நேரப்படி திங்கள்கிழமை அதிகாலை 3.30மணி) இந்த முடிவு அறிவிக்கப்படும். புளோரிடா சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி இந்த முடிவு அறிவிக்கப்படுகிறது.இருப்பினும் இதன் மூலம் மட்டும் அதிபர் தேர்தல் குழப்பம் முடிவுக்கு வந்து விடாது என்று தெரிகிறது.
புளோரிடா வாக்கு எண்ணிக்கையின் முடிவில் குடியரசுக் கட்சி வேட்பாளர் ஜார்ஜ்புஷ், ஜனநாயகக் கட்சிவேட்பாளர் அல் கோரை விட கூடுதல் வாக்குகள் பெற்றிருக்கலாம் என்று நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் செய்திவெளியாகியிருந்தது.
இருப்பினும், வாக்கு வித்தியாசம் கூடுதலாக இருக்காது என்றும் அது தெரிவித்துள்ளது. புஷ்ஷுக்கு ஓரளவு பலம்கொடுக்க இந்த முடிவு பயன்படலாம். மேலும், கோர் தனது தோல்வியை ஒப்புக்கொள்ளவும், இந்த முடிவுபுஷ்ஷுக்கு பயன்படலாம் என்றும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையே, கை வாக்கு எண்ணிக்கை முடிவை எதிர்த்து ஜார்ஜ் புஷ் தொடுத்துள்ள வழக்கில், அமெரிக்க சுப்ரீம்கோர்ட் எப்போது தீர்ப்பு வழங்கும் என்று தெரியவில்லை. டிசம்பர்1-ம் தேதி இந்த வழக்கின் விசாரணைதுவங்குகிறது. புளோரிடா மாநிலத்தின் 3 கவுண்டிகளில் கை வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டதை எதிர்த்து புஷ்வழக்குத் தொடர்ந்துள்ளார்.
இதற்கிடையே, புளோரிடாவின் புரோவர்ட் மற்றும் பாம்பீச் கவுண்டிகளில் தொடர்ந்து கைகளள் வாக்குகளைஎண்ணும் பணி நடந்து வருகிறது. இந்த எண்ணிக்கையில், புரோவர்ட் கவுண்டியில் கோருக்குக் கூடுதலாக 532வாக்குகள் கிடைத்துள்ளதாக தெரிகிறது. பாம் பீச் பகுதியில் புஷ்ஷுக்கு சில ஓட்டுக்கள் கிடைத்துள்ளன.ஒட்டுமொத்தமாக, அனைத்துக் கவுண்டிகளிலும் திருத்தப்பட்ட வாக்கு எண்ணிக்கையின்படி புஷ்ஷுக்கு கூடுதலாக100 ஓட்டுக்கள் கிடைத்துள்ளதாகத் தெரிகிறது.
திங்கள்கிழமை காலை யார் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றது என்பது தெரிந்து விடும். அதன் பிறகு அமெரிக்கசுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பையடுத்து அது உறுதி செய்யப்படலாம் அல்லது வேறு ஏதாவது குழப்பம் தலை தூக்கலாம்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications