தகவல் சேகரிக்கிறார் சாங்கிலியானா
பெங்களூர்:
கர்நாடக போலீஸ் அதிகாரி சாங்கிலியானா, வீரப்பனைப் பிடிப்பதற்காக பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் குறித்து ரகசிய ஆலோசனை நடத்தி வருகிறார்.காடு குறித்த தகவல்களையும் அவர் சேகரித்து வருகிறார்.
வீரப்பனும், அவரது கூட்டாளிகளும் சுமார் 18 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட அடர்ந்த காட்டுக்குள் மறைந்திருக்கிறார்கள்.வீரப்பனைப் பிடிப்பதற்காக தமிழக, கர்நாடக அதிரடிப்படை வீரர்கள் காட்டுக்குள் சென்று தங்களது தேடுதல் வேட்டையைத் தொடங்கியுள்ளனர்.
கர்நாடக அதிரடிப் படைத் தலைவர் மலை மாதேஸ்வரா மலையில் உள்ள பொதுப்பணித்துறை விருந்தினர் மாளிகையில் முகாமிட்டுத் தங்கியுள்ளார். காட்டின்வரைபடத்தை வைத்து முழுமையாக ஆய்வு நடத்தி வருகிறார். வீரப்பன் பதுங்கியுள்ள காட்டின் விவரங்கள் குறித்து, மலை மாதேஸ்வரா கோவிலின் தலைமைநிர்வாக அதிகாரியிடம் விசாரித்தார்.
வியாழக்கிழமை சாம்ராஜ்நகர் மாவட்ட காட்டு இலாகா மூத்த அதிகாரிகளோடு முதல் சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தினார். வீரப்பன் தங்கும்இடங்கள், நடமாடும் பகுதிகள் குறித்தும் சாங்கிலியானா ரகசியமாக ஆராய்ந்து வருகிறார்.
தனது நடவடிக்கைகளை யாரும் ஊகிக்காதபடி மேற்கொண்டு வருகிறார் சாங்கிலியானா. அவர், எந்த நேரத்தில் எங்கு செல்வார் என்பது மிகவும்ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. வீரப்பனின் சொந்த ஊரான கோபிநத்தத்திற்குப் போவதாகக் கூறிய சாங்கிலியானா, திம்பம் காட்டுப் பகுதிக்குச்சென்று அங்கு வீரப்பன் குறித்த தகவல்களை சேகரித்தார்.
இரு மாநில அரசுகளுக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கிவரும் வீரப்பனை, இதுவரைப் பிடிக்க முடியாமல் போனதற்கான காரணங்களையும் அவர்ஆராய்ந்து வருகிறார்.
இதற்கு முன் அதிரடிப்படை வீரர்கள் செய்த தவறுகள், தேடுதல் வேட்டையில் ஏற்பட்ட குளறுபடிகள் போன்றவை மீண்டும் நடக்காமல் பார்த்துக்கொள்வதில் அவர் அதிக அக்கறை காட்டி வருகிறார்.
சத்யமங்கலம் காட்டுப் பகுதியின் ஒவ்வொரு அங்குலத்தையும், விரல் நுனியில் வைத்திருக்கும் வீரப்பனும், அவரது கூட்டாளிகளும் பலமுறை போலீஸாருக்குதண்ணி காட்டியிருக்கிறார்கள். இதற்கு வீரப்பனின் நடமாட்டம் குறித்துப் போலீஸாருக்கு சரியான தகவல்கள் கிடைக்காதது தான் காரணம் என்றுகருதப்படுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications