அதிரடிப் படையினரை முற்றுகையிட்ட யானைகள்
Subscribe to Oneindia Tamil
ஈரோடு:
சத்தி வனப் பகுதியில் தங்கியிருந்த அதிரடிப்படை வீரர்களின் கூடாரத்தை யானைகள்முற்றுகையிட்டன.
இந்த யானைகளை காட்டுவாசிகளின் உதவியுடன் படையினர் விரட்டியடித்தனர்.
சத்தி வனப்பகுதியில், வடவள்ளி என்ற இடத்திற்கு அருகில் உள்ள பங்களாமேட்டில்கூடாரம் அமைத்து அதிரடிப்படையினர் தங்கியுள்ளனர். அப்போது அங்கு 5யானைகள் கொண்ட கும்பல், அதிரடிப்படையினர் கூடாரத்தை நெருங்கின.
இதை அறிந்த சோளர் இன காட்டு வாசி மக்கள், தகர டப்பாக்களைத் தட்டினர்.அப்போது சத்தம் கேட்டு வெளியே வந்த அதிரடிப்படையினரும் சத்தம் போட்டுயானையை விரட்டினர்.
காட்டுக்குள் சென்றுள்ள அதிரடிப்படையினர், இது போன்ற புது அனுபவங்களை பெறஉள்ளனர்.












Click it and Unblock the Notifications