கொளத்தூர் மணி கைதாவாரா?
கோவை:
கொளத்தூரில் நடந்த மனித உரிமைகக் கமிஷன் கண்டன மாநாட்டில் வீரப்பனிடம் தூதராக சென்ற கொளத்தூர்மணி கைது செய்யப்படலாம் என்ற பரபரப்பு ஏற்பட்டது.
ராஜ்குமார் மீட்பு விவகாரத்தில் கடைசி நேரத்தில் சேர்ந்த சில தூதர்களில் கொளத்தூர் மணியும் ஒருவர். காட்டுக்குச்செல்வதற்கு முன்பு திராவிடர் கழகத்தில் இருந்தவர். காட்டுக்குப் போய் விட்டு வந்த பின் அவர் தி.கவிலிருந்துவிலகி விட்டார்.
எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது, கொளத்தூர் பகுதியில் விடுதலைப் புலிகளுக்கு முகாம் அமைக்கஉதவியவர். பிரபாகரனுடன் நல்ல நட்பு கொண்டவர். இந்த நிலையில், கொளத்தூரில், தேசிய மனித உரிமைக்கமிஷனைக் கண்டித்து ஞாயிற்றுக்கிழமை மாநாடு நடந்தது. இதில், வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி மற்றும்வீரப்பனின் தம்பி அர்ஜூனன் மனைவி, அர்ஜூனனின் மகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாநாட்டில் கொளத்தூர் மணி மற்றும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இணைந்து இருந்த படங்கள்விற்பனை செய்யப்பட்டன. விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான புத்தகங்கள் மற்றும் பிரசுரங்கள் விற்பனைசெய்யப்பட்டன.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பிறந்த நாளில் இந்த மாநாடு நடந்ததால், பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து கொளத்தூர் மணியைப் போலீசார் கைது செய்யலாம், என்ற சூழ்நிலை நிலவியது. போலீசாரைஅங்கிருந்து போய் விடுமாறு மாநாட்டு அரங்கில், மைக்கில் பகிரங்கமாகவே வேண்டுகோள் விடுக்கப்பட்டது.மாநாட்டு அரங்கில் உள்ள உளவுப் பிரிவு போலீசாரையும் வெளியேறுமாறு கொளத்தூர் மணி மைக்கிலேயேவேண்டுகோள் விடுத்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications