சொத்துத் தகராறு: முதியவரை கொன்ற தம்பதிகள்

Subscribe to Oneindia Tamil

கரூர்:

சொத்துத் தகராறில் வயதானவரைக் கொலை செய்த இரு தம்பதியினரைப் போலீசார் தேடி வருகின்றனர்.

கரூர் மாவட்டம், அருகம்பாளையத்தைச் சேர்ந்தவர் சோளியப்பன் (59). இவர் விவசாயம் செய்து வருவதுடன்நிலப் புரோக்கராகவும் செயல்பட்டு வந்தார்.

இந் நிலையில் வாங்கல்பாளையத்தைச் சேர்ந்த பெரியசாமி என்பவரது மனைவி காளியம்மாளுக்கும் இவருக்கும்கள்ளத் தொடர்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு காளியம்மாள் இறந்து விட்டார். இதன் பின்னர் பெரியசாமியின் மகன்ஞானசேகரன் சோளியப்பனிடம், தனக்கு ரூ. 20 லட்ச ரூபாய் பணம் அல்லது சொத்தில் பங்கு வேண்டும் எனக்கேட்டுத் தகராறு செய்துள்ளார்.

ஆனால் சோளியப்பன் தர மறுத்து விட்டார்.

ஆனால், ஞானசேகரன், அவரது மனைவி சாந்தி, ஞானசேகரனின் தம்பி சுப்ரமணி என்ற மணி, மணியின் மனைவிகவுரி ஆகியோர் சோளியப்பனிடம் சென்று அவரை மிரட்டி கையெழுத்து வாங்கியுள்ளனர். சோளியப்பனைஅடித்து உதைத்துள்ளனர்.

இதில் பலத்த காயமடைந்த சோளியப்பன், ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சைபலனின்றி இறந்தார்.

இந்த சம்பவம் குறித்து சோளியப்பனின் மகன் பழனிச்சாமி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவுசெய்து நான்கு பேரையும் தேடி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+