ஊட்டி அருகே 4000 ஆண்டு பழைய குகைக் கோவில்
ஊட்டி:
ஊட்டி அருகே நான்காயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய குகை ஓவியங்கள் கண்டறிப்பட்டுள்ளன. இவற்றைப்பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளிநாட்டு ஆராய்ச்சியாளர் தெரிவித்துள்ளார்.
நீலகிரியில் பல்வேறு இடங்களில் பண்டைய காலச் சான்றுகள் கண்டறியப்பட்டு வருகின்றன. அமெரிக்காவில்உள்ள மெக்சிகன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஆலன் ஜோகரின் இந்த மலைப் பகுதிகளில் தனதுஆராய்ச்சியை மேற்கொண்டு வருகிறார்.
கடந்த 1984 ம் ஆண்டு முதல் ஐந்து முறை நீலகிரி மலைப் பகுதிகளில் விஜயம் செய்த இப் பேராசிரியர், மாயாறுமலைப் பகுதி முதல் பவானி ஆறு வரை உள்ள பகுதியை ஆராய்ச்சி செய்துள்ளார்.
தற்போது நீலகிரி மலைப் பகுதியில் இவர் ஆராய்ச்சி செய்ததில் நான்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்புவரையப்பட்ட அபூர்வமான ஓவியங்களை கண்டறிந்துள்ளார்.
இதன் மூலம் பழங்கால மக்களின் வாழ்க்கை முறைகள் பற்றி அறிய முடியும். வரலாற்றிலேயே இடம் பெறாத பலபுதிய தகவல்களை இந்த ஓவியங்கள் அளித்துள்ளன.
வேட்டையாடுதல், வேட்டையாடப் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள், இங்கு வாழ்ந்த பழங்குடி மக்களின் குழுநடனம், ஆட்சிப் பணிவிடை, வளர்க்கப்பட்டு வந்த வீட்டு விலங்குகள், ஆகியவை குறித்து விரிவாக இந்தஓவியங்கள் விளக்குகின்றன.
வெள்ளை மற்றும் சிவப்பு நிறங்களில் இந்த ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. ஓவியங்கள் வரையப்பட்டுள்ளஇடம் சரிவான மலைப் பகுதியாகவும், வெப்பம், மழை போன்றவற்றால் பாதிக்கப்படாத வகையில் இந்தஓவியங்கள் அமைந்துள்ளன.
சுமார் 5,000 மீட்டர் உயரத்தில், 200 மீட்டர் நீளத்தில், 12 மீட்டர் அகலத்தில் இந்த ஓவியங்கள் காணப்படுகின்றன.












Click it and Unblock the Notifications