தமிழக காங்.க்கு புதிய தலைவரை நியமிக்க சோனியா திட்டம்
டெல்லி:
தமிழக காங்கிரஸ் கட்சிக்குப் புதிய தலைவரை நியமிக்க சோனியா காந்தி முடிவு செய்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் தலைவராக இருக்கும் இளங்கோவனை மாற்ற வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் முக்கியப் பிரமுகர்கள் சிலர் கோரிக்கைவிடுத்துள்ளனர். டெல்லியில் முகாமிட்டு உள்ள இவர்கள் சோனியா காந்தி மற்றும் தலைவர்களை சந்தித்துப் பேசினார்கள்.
இந்த நிலையில் டெல்லி நாடாளுமன்ற அலுவலகத்தில் சோனியா காந்தியை தமிழக காங்கிரஸ் பிரமுகர்கள் தங்கபாலு, திண்டிவனம் ராமமூர்த்தி, அன்பரசுஆகியோர் திங்கள்கிழமை சந்தித்துப் பேசினார்கள். இந்த சந்திப்பு அரை மணி நேரம் நீடித்தது.
அப்போது தமிழக காங்கிரசுக்குப் புதிய தலைவரை நியமிக்க வேண்டும். நீங்கள் நியமித்த தலைவரை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம் என்று தமிழககாங்கிரசார் தெரிவித்தனர்.
அதற்கு நீங்கள் திருப்திபடும்படி விரைவில் தமிழக காங்கிரஸ் தலைவர் நியமிக்கப்படுவார். எல்லோரும் அவருடன் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்றுசோனியா காந்தி கூறியதாக காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே விரைவில் தமிழக காங்கிரசுக்கு புதிய தலைவரை சோனியா காந்திநியமிப்பார் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications