தமிழக மீனவர்களைக் காப்பாற்றுங்கள்: முதல்வர்
சென்னை:
தமிழக மீனவர்களைக் காப்பாற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் கருணாநிதி, பிரதமர் வாஜ்பாய்க்குசெவ்வாய்க்கிழமை கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கச்சத்தீவு அருகே மீன்பிடித்த முனிசாமி என்ற தமிழக மீனவர் இலங்கை கடற்படை அதிகாரியால் செவ்வாய்க்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டார். அவருடன்மீன் பிடிக்கச் சென்ற மேலும் 3 பேர் தப்பித்து விட்டனர்.
இதையடுத்து, தமிழக முதல்வர் கருணாநிதி, பிரதமர் வாஜ்பாய்க்குக் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் இந்த மாதம் 27 ம் தேதி இலங்கைக்கடற்பகுதியில் மீன் பிடித்ததாகக் கூறி, தமிழகத்தைச் சேர்ந்த மீன்பிடிப் படகு மீது துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் குண்டு பாய்ந்து இறந்துள்ளார்.
இது தமிழக மக்களிடம் ஆழ்ந்த கவலையையும், திகைப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற நிகழ்வுகள் இனிமேல் நடக்கக்கூடாது. இலங்கைமீனவர்கள், இந்தியக் கடற்படைக்கு வந்தால்கூட, அவர்களைக் கைது செய்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துகிறோம். இதே போல் அவர்களும்நடந்து கொள்ள வேண்டும்.
மாறாக மீனவர்களை சுட்டுக் கொல்வது நீதிக்கும், நியாயத்துக்கும் புறம்பான செயலாகும். எனவே இப்பிரச்சனையை இலங்கை அரசின் உயர்நிலைஅதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டு வந்து அப்பாவித் தமிழக மீனவர்கள் கொலை செய்யப்படுவதைத் தடுக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் முதல்வர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications