தமிழகத்தை புயல் தாக்கியது: கனமழை, சூறாவளி
சென்னை:
சென்னையை புதன்கிழமை கடும் புயல தாக்கியது. பிற்பகலில் இந்தப் புயல் கரையைக் கடந்தது
இதையடுத்து சென்னையிலும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலும் கன மழை பெய்தது. பெரும் வேகத்துடன் சூறாவளிக் காற்று வீசியது.
சுமார் 6 மணி நேரம் தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால் நகர் முழுவதும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. பல இடங்களில் மின் கம்பங்கள்சரிந்தன. மின் வினியோகம் பாதிக்கப்பட்டது.
குடிசைகளின் கூரைகள் பறந்தன.
தொலைபேசி இணைப்புக்கள் அறுந்தன. 150 கிலோமீட்டர் வேகத்தில் காலை முதல் சூறாவளிக் காற்று வீசியது. ஆனால் இதுவரை உயிர்ச்சேதமோஅல்லது மிகப் பெரிய சேதமோ ஏற்படவில்லை. பள்ளிக், கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
வானிலை ஆராய்ச்சியாளர்கள் தகவல்:
புயல் குறித்து வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கையில், ஆந்திரப்பிரதேசம் மற்றும் வட தமிழ்நாடு, பாண்டிச்சேரி பகுதிகளில் புயல் காற்று வீசியது.மேலும் 150 கிலோ மீட்டர் வேகத்திலிருந்து 180 கிலோ மீட்டர் வேகம் வரை சூறாவளிக் காற்று வீசியது. அதைத் தொடர்ந்து கடும் மழை பெய்தது.
இதனால் கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, காஞ்சிபுரம், தஞ்சாவூர், திருவாரூர் பகுதிகளில் கன மழை பெய்தது. ஆந்திராவில் குண்டூர்,நெல்லூர் மற்றும் பாண்டிச்சேரியிலும் சூறாவளிக்காற்றும், மழையும் பெய்தது என்றனர்.
மாநகராட்சி கமிஷனர் பேட்டி:
முன்னதாக, புதன்கிழமை காலை சென்னை மாநகராட்சிக் கமிஷனர் ராதா கிருஷ்ணன் இது குறித்து நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் புயலாலோ அல்லதுமழையாலோ சேதம் ஏற்பட்டால் அதைத் தடுப்பதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற் கொள்ளப்பட்டு விட்டன.
மண்ணெண்ணெய் மற்றும் அரிசி ஆகியவை தயாராக வைக்கப்பட்டுள்ளன. மருத்துவக் குழுக்களும் திடீரென்று ஏற்படும் புயலைச் சமாளிப்பதற்காகத்தயாராக வைக்கப்பட்டுள்ளனர்.
கடலோரப் பகுதிகளில் யாரும் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications